பெண்கள் பிரீமியர் லீக்: பெத் மூனி அதிரடி.. பெங்களூருவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த குஜராத்
புதுடெல்லி, 5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு – குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பெத் மூனி – லாரா வோல்வார்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இவர்களை தவிர அந்த அணியில் யாரும் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. … Read more