ஆக்கி தரவரிசையில் முன்னேறிய இந்தியா…முதல் இடத்தை இழந்த பெல்ஜியம்

புதுடெல்லி, கடந்த இரு வாரங்களாக பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் விளையாட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இந்த தொடரில் ஆக்கி விளையாட்டில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. நெதர்லாந்து தங்கப்பதக்கத்தையும், ஜெர்மனி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது. இந்நிலையில், ஆக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. இதில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியா (2848.67 புள்ளி) 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நெதர்லாந்து (3168.01 … Read more

Duleep Trophy 2024: நேருக்கு நேர் மோதப்போகும் ரோஹித் சர்மா – ஜஸ்பிரிட் பும்ரா?

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிவடைந்தது. இந்த தொடரில் எதிர்பாராத விதமாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஒரு மாத காலம் ஓய்வில் இருக்க உள்ளது. அடுத்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷிற்கு எதிராக இரண்டு டெஸ்ட் தொடரில் மீண்டும் விளையாடுகிறது. இதற்கிடையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி … Read more

பேட்டுக்கு ஓய்வு கொடுத்து இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றிய ஆஸ்திரேலிய வீரர்

மெல்போர்ன், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி இறுதி ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்டது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் சதமடித்து (137 ரன்) சதமடித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மார்னஸ் லபுஸ்ஷேன் … Read more

இவர்கள் இனி அணிக்கு தேவையில்லை! இலங்கை தொடருக்கு பின் அதிரடி முடிவு!

சமீபத்தில் இந்திய அணி இலங்கைக்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் சூரியகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து ஒரு நாள் தொடருக்கான அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றனர். ஆனாலும் இலங்கை அணியிடம் ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இந்திய அணி. இந்த வெற்றியின் … Read more

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தோற்றாலும் இந்த 3 விஷயம் பாசிடிவ் – தினேஷ் கார்த்திக்

Dinesh Karthik : இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்திருக்கும் நிலையில், அதிலும் மூன்று பாசிட்டிவான அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். அண்மையில் இலங்கை சுற்றுப் பயணம் சென்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் போட்டி தொடரை ரோகித் சர்மா தலைமையில் இழந்தது. இத்தனைக்கும் இலங்கை அணியில் பல முன்னணி வீரர்கள் விளையாடவில்லை. அந்த சூழலிலும் இலங்கை கிரிக்கெட் அணி இந்திய … Read more

இந்த தோல்வியை நினைத்து கவலை வேண்டாம்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில்… – தினேஷ் கார்த்திக்

புதுடெல்லி, இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 27 வருடங்கள் கழித்து இந்தியா இழந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்திருந்த நிலையில் 2 மற்றும் 3-வது போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட … Read more

துலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்… ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வு – ஏன் தெரியுமா?

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகும் இந்திய அணி அதன் ஐசிசி கோப்பை வேட்டையில் இன்னும் தீவிரமாகி உள்ளது எனலாம். இதனால் இந்திய அணி பல்வேறு மாற்றங்களுக்கும் உள்ளாகி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி (Virat Kohli), ஜடேஜா உள்ளிட்டோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து இவர்கள் டெஸ்ட் மற்றும் ஓடிஐ போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.  … Read more

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

வெலிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 9-ம் தேதி இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடர் செப்டம்பர் 18-ம் தேதி … Read more

ஐ.பி.எல். 2025: ரிஷப் பண்ட் கட்டாயம் வேறு அணிக்கு செல்ல மாட்டார் – கங்குலி

புதுடெல்லி, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் … Read more

வங்காளதேச வன்முறையின்போது வீடு எரிக்கப்பட்டதா? லிட்டன் தாஸ் விளக்கம்

டாக்கா, வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறைகள் காரணமாக அங்கு அசாதாரண சூழல் நிலவு வருகிறது. வன்முறையின்போது அந்நாட்டு கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடு எரிக்கப்பட்டதாகவும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிகளவு தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் வன்முறையின்போது தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர் கூறுகையில், “நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த சில நாட்களாகவே என்னுடைய வீடு … Read more