இனி ஓடிஐ போட்டியிலும் ஜடேஜா விளையாடவே மாட்டார்… மூன்று முக்கிய காரணங்கள்!

Ravindra Jadeja Future In ODI Cricket: ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி சாம்பியனாக வலம் வரும் இந்த வேளையில் பல்வேறு மாறுதல்களை அணியில் நிகழ்ந்து வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கு பின், இளம் வீரர்கள் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4-1 கணக்கில் டி20 தொடரை  வென்று நாடு திரும்பினர். அதன்பின்னர், தற்போது அனைவரின் கவனமும் இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்தின் மீது திரும்பி உள்ளது.  இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல … Read more

டி.என்.பி.எல்.கிரிக்கெட்: நெல்லை – திருச்சி அணிகள் இன்று மோதல்

நெல்லை, 8 அணிகள் இடையிலான 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி என் பி எல்) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது. முதல் 2 சுற்று ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியனான சேப்பாக் … Read more

மகளிர் ஆசிய கோப்பை: மந்தனா அதிரடி… பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா

தம்புல்லா, 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 25 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் … Read more

தமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த கால்பந்து வீராங்கனை விருது

புதுடெல்லி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு நடந்தது. இதில் 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது இந்துமதி கதிரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா எப்.சி. வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றிய அவர் 5 கோல் அடித்தார். கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். … Read more

கவுதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஓப்பனாக பேசிய விராட் கோலி

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கம்பீரின் பதவிக்காலம் இந்த தொடருடன்தான் தொடங்க … Read more

டி20க்கு கேப்டனாக இருந்தும் ஒருநாள் அணியில் சூர்யாவிற்கு இடமில்லை! ஏன் தெரியுமா?

India squad for Sri Lanka: இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் ஜூலை 27 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அறிவிப்பு வெளியாகி பலத்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா சிறப்பான பந்துவீச்சு… பாகிஸ்தான் 108 ரன்களில் ஆல் அவுட்

தம்புல்லா, 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியில் 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் … Read more

சஞ்சு சாம்சனைப் போல் ஓரங்கட்டப்படும் ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக்குக்கு அதிர்ஷ்டம்

Cricket News Tamil : இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கம்போல் இந்த தொடருக்கும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவரை டி20 தொடருக்கு மட்டும் எடுத்திருக்கும் பிசிசிஐ, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒருநாள், டி20 என அனைத்து வடிவ போட்டிகளிலும் சஞ்சுசாம்சன் எவ்வளவு தான் சிறப்பாக ஆடினாலும், அவருக்கான வாய்ப்பை பிசிசிஐ கொடுப்பதே இல்லை. ஒருவேளை தப்பித் தவறி ஒட்டுமொத்தமான அணியில் தேர்வு செய்தாலும் பிளேயிங் … Read more

இந்திய டி20 அணி… ஒரு இடத்திற்காக முட்டிமோதும் இந்த 3 வீரர்கள் – பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

IND vs SL T20 Probable Playing XI: இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஓடிஐ தொடர்களை விளையாட உள்ளது. ஜூலை 27, 28, 30 ஆகிய மூன்று நாள்களில் மூன்று டி20 போட்டிகளும், ஆக. 2, 4, 7 ஆகிய மூன்று நாள்களில் மூன்று ஓடிஐ போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த தொடர்களுக்கான இந்திய அணியின் ஸ்குவாடுகள் நேற்று பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டன.  ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நடைபெறும் முக்கிய … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

கோவை, டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சேலம் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார் 17 ரன்களிலும், ஜெகதீசன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் கேப்டன் பாபா அபராஜித் … Read more