சீனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), கரேன் கச்சனோவ் (ரஷியா) உடன் மோதினார். இதில் முதல் செட்டை டை பிரேக்கரில் கைப்பற்றிய அல்காரஸ், அடுத்த செட்டை எளிதில் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 7-5 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று … Read more

கோபத்தில் டிவியை உடைத்த தோனி…? ஆர்சிபியிடம் தோற்றதால் ஆவேசம் – நடந்தது என்ன?

MS Dhoni: 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி உடனான கடைசி போட்டியில் தோற்றதற்கு பின்னர், தோனி அந்த கோபத்தில் டிவி உடைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இங்கு காணலாம். pic.twitter.com/C43UZWPtaM — Out Of Context Cricket (@GemsOfCricket) September 29, 2024

டிராவிட் மகனுக்கு வந்த சோதனை, வாய்ப்பு கிடைச்சும் விளையாட முடியல

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி கர்நாடகாவில் நடைபெற்ற டி20 லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இந்திய கிரிக்கெட்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தேர்வு செய்யபட்டார். அவர் புதுச்சேரியில் நடைபெறும் இந்தியா 19 – ஆஸ்திரேலியா 19 அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக சமித் டிராவிட் இப்போது முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து … Read more

தோனிக்கு ரூ. 4 கோடி தான்! ஆனால் ருதுராஜ்க்கு ரூ. 18 கோடி! ஐபிஎல் 2025 சம்பள விவரம்!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஏலத்திற்கு முன்பு சில விதிகளை மாற்றி உள்ளது ஐபிஎல் நிர்வாகம். மற்ற ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த முறை பிசிசிஐ தக்க வைப்புத் தொகையில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. மேலும் பழைய விதிகளையும் கொண்டு வந்துள்ளது. இதனால் ஏலம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த புதிய விதியின் மூலம் ஐபிஎல் … Read more

பென் டக்கெட் அதிரடி சதம்.. ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

பிரிஸ்டல், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் இணை அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய சால்ட் 27 பந்துகளில் 45 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் டக் அவுட் ஆகி … Read more

சீனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் காலிறுதிக்கு தகுதி

பீஜிங், பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டச்சு வீரரான கிரீக்ஸ்பூர் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் காலிறுதியில் கரேன் கச்சனோவ் … Read more

கான்பூர் டெஸ்ட்: இனி மழை பெய்யாது… வெற்றிக்கு இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? – அதிசயம் நடக்குமா?

IND vs BAN, Kanpur Test: இந்தியா – வங்கதேசம் அணிகள் (India vs Bangladesh) இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளன. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கடந்த செப். 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை … Read more

விராட் மட்டும் போதும்… மற்ற அனைவரையும் கழற்றி விடுங்கள் – பெங்களூரு அணிக்கு ஆர்பி சிங் அட்வைஸ்

பெங்களூரு, 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், ஏலத்தில் எவ்வளவு செலவிடலாம் என்பது குறித்து அணி உரிமையாளர்களுடன், ஐ.பி.எல். நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் விரிவாக விவாதித்தது. அப்போது அணி நிர்வாகிகள் பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர். அது குறித்து பெங்களூருவில் … Read more

ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்க கடைசி நாள் இதுதான்… கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்

IPL 2025 Mega Auction Retention List: ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும். அதாவது, மெகா ஏலம் என்றால் அனைத்து அணிகளும் தங்களின் பெரும்பாலான வீரர்களை ஏலத்திற்கு விடுவித்து, சில முக்கிய வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ளும். அந்த வகையில், 2025 ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்திற்கான பாலிசிகள் மற்றும் விதிகளை பிசிசிஐ நேற்றிரவு அறிவித்துள்ளது.  அதாவது முன்னர் கூறியபோது போல் பெரும்பாலான வீரர்களை அணிகள் ஏலத்திற்கு … Read more

பேப் 4 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி தான் சிறந்தவர்.. ஆனால்.. – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களை பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுவது வழக்கமாகும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட மற்ற மூவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜோ ரூட் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி 12000 ரன்களை கடந்து சச்சினை நெருங்கி … Read more