2024 ஐ.பி.எல். தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் – ஐ.பி.எல். தலைவர் அருண் தூமல்

மும்பை, 2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறும் சமயத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியா காலிறுதிக்கு தகுதி

சிலாங்கூர், ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கை சேர்ந்த யங் கா லாங் அங்குஸ் உடன் மோதினார். இதில் பிரனாய் 18-21 மற்றும் 14-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் ஹாங்காங் முதலில் 1-0 என முன்னிலை … Read more

தவறான செய்திகளை பரப்பி என்னை அணியிலிருந்து ஓரங்கட்டி விட்டனர்- வருண் சக்கரவர்த்தி ஆதங்கம்

சென்னை, தமிழக கிரிக்கெட் வீரரான வருண் சக்கரவர்த்தி டி.என்.பி.எல். தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 2020-ல் நடைபெற்ற சீசனில் அசத்திய அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகி 3 போட்டிகளில் விளையாடினார். அந்த சமயத்தில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்களாக இருந்த சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் சுமாரான பார்மில் தடுமாறினார்கள். அதன் காரணமாக துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக்கோப்பையில் அவர்களை கழற்றி விட்ட தேர்வுக்குழு வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுத்தது. … Read more

கடைசி ஒருநாள் போட்டி; ரஹ்மத்- ஓமர்சாய் அரைசதம் – ஆப்கானிஸ்தான் 266 ரன்கள் சேர்ப்பு

கொழும்பு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி … Read more

ரோஹித் பார்முலாவை கையில் எடுத்த இங்கிலாந்து… இந்திய அணியின் பதிலடி என்ன?

IND vs ENG 3rd Test, Playing XI: இங்கிலாந்து டெஸ்ட் அணி பிரண்டன் மெக்கலத்தின் பயிற்சியின் கீழ் செயல்பட தொடங்கியதில் இருந்து தனது அணுகுமுறையையே மொத்தமாக மாற்றிவிட்டது எனலாம். பென் ஸ்டோக்ஸ் தலைமையேற்ற பின்னர், இன்னும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புது ரத்தம் பாய்ந்தது எனலாம். மெக்கலம் பயிற்சியாளராக வந்த பின் இங்கிலாந்து 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 தொடர்களை வென்றுள்ளது, 1 தொடரை மட்டுமே இழந்துள்ளது.  அந்த வகையில், தற்போது இந்திய சுற்றுப்பயணத்திலும் … Read more

IND v ENG: முதல் முறையாக சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு! இந்திய அணியில் 4 மாற்றங்கள்!

India vs England: பிப்ரவரி 15 அன்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தியா இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.  விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்டில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.  இந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள, ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொடர் 1-1 என சம நிலையில் … Read more

'ஜெய்ஸ்வால் விக்கெட்டை இப்படி எடுக்கலாம்' பென் ஸ்டோக்ஸிற்கு வந்த முக்கிய அட்வைஸ்

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (IND vs ENG Test Series) விளையாடி வருகிறது. கடந்த ஜன. 25ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி நான்கு நாள்களில் நிறைவடைந்தது, அதில் இங்கிலாந்து (Team England) 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தலாக தனது வெற்றிக்கணக்கை தொடங்கியது. அடுத்து விசாகப்பட்டினத்தில் பிப். 2ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நான்கு நாள்களில் … Read more

பிசிசிஐ கொடுத்த அழுத்தம்! இஷான் கிஷன் எடுத்த முக்கிய முடிவு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆனது சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டதாக செய்திகள் வெளியானது. அதன்படி, இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் அவர்களின் மாநிலம் சார்ந்த அணிக்காக கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று கூறி உள்ளது.  இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தவிர அனைவரும் கண்டிப்பான முறையில் விளையாட வேண்டும் என்று எச்சரித்து இருந்தது.  பெரும்பாலான வீரர்கள் ரஞ்சி கோப்பை போட்டிகளை புறக்கணித்து வருவதால், இந்திய அணியின் பேட்டிங் தரம் … Read more

அவரது ஈகோவுடன் விளையாடி அவரை வீழ்த்துங்கள் – இங்கிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் அறிவுரை

லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியாவின் பேட்டிங் துறையில் யஷஸ்வி ஜெய்வால் அபாரமாக ஆடி வருகிறார். ஜெய்வால் இதுவரை 321 ரன்கள் … Read more

டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு – சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில், ரோகன் போபண்ணா-மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் அதிக வயதில் ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை 43 வயது இந்திய வீரர் ரோகன் போபண்ணா படைத்தார். இதையடுத்து அவருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என கர்நாடக … Read more