இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்! எந்த தொடரில் தெரியுமா?

ஹாங்காங் சிக்ஸஸ் 2024 (Hong Kong Sixes 2024) போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் டின் குவாங் சாலை கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 6 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, ஸ்டூவர்ட் பின்னி, பாரத் சிப்லி, கோஸ்வாமி, நதீம் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள் … Read more

3வது டி20 போட்டி; ஹர்ஷித் ராணா அறிமுகம் ஆவாரா…? – துணை பயிற்சியாளர் பதில்

ஐதராபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று … Read more

அஸ்வின் vs பும்ரா: ரோஹித் விளையாடாவிட்டால் அடுத்த கேப்டன் யார்? – கம்பீர் யார் பக்கம்?

Team India, Captaincy Debate: இந்திய அணி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் தொடர் என்றால் அதே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர்தான். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 1996-97ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி ஆண்டுதோறும் நடைபெறும். இதுவரை 16 தொடர்கள் நடைபெற்றுள்ளது.  ஆஸ்திரேலிய அணி (Team Australia) இதுவரை 5 முறை தொடரை வென்றுள்ளது. இந்திய அணி (Team India) 10 முறை தொடரை … Read more

IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது… இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?

India vs New Zealand Test Series: வங்கதேச அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகள், 2 டி20 போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் நாளை (அக். 12) கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கைப்பற்றிய குதூகலத்துடன் இந்திய அணி (Team India) அடுத்து நியூசிலாந்தை அணி எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி (Team New Zealand) இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 … Read more

வருண் சக்கரவர்த்தியை மீண்டும் அணிக்குள் கொண்டு வர இதுதான் காரணம் – ஆகாஷ் சோப்ரா

புதுடெல்லி, வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டும், 2வது ஆட்டத்தில் 2 விக்கெட்டும் வீழ்த்தி தனது … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை; நாடு திரும்பும் பாகிஸ்தான் கேப்டன் – காரணம் என்ன..?

துபாய், 9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.’ஏ’ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருமுறை கூட ரன் அவுட் ஆகாத பிளேயர்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிளேயர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமான சாதனைகளை வைத்திருக்கின்றனர். பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இருந்தாலும், அவர்கள் வசம் இல்லாத பல சாதனைகளை பல பிளேயர்கள் படைத்திருக்கின்றனர். அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருமுறை கூட ரன்அவுட்டாக பிளேயர்களின் பட்டியலை பார்க்கலாம்.  1. முடாசர் நாசர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடிய பல பிளேயர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் முடாசர் நசார் ஒரு தனித்துவமான சாதனையை வைத்திருக்கிறார். … Read more

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; பென் டங் அதிரடி… மணிபால் டைகர்ஸை வீழ்த்திய இந்தியா கேப்பிடல்ஸ்

ஸ்ரீநகர், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஸ்ரீநகரில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிடல்ஸ் – மணிபால் டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இந்தியா கேப்பிடல்ஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய பென் டங் 97 ரன்கள் எடுத்தார். மணிபால் தரப்பில் அதிகபட்சமாக குணரத்ன 3 … Read more

முஷீர் கானை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரோகித் சர்மா

லக்னோ, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். இவரது சகோதரர் முஷீர் கான். 19 வயதேயான இவர் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபியில இந்தியா “சி” அணிக்காக விளையாடி 181 ரன்கள் விளாசினார். இதையடுத்து இரானி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக முஷீர் கான் விளையாட இருந்தார். ஆனால், இரானி கோப்பை தொடரில் விளையாட … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

துபாய், 9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.’ஏ’ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி … Read more