T20 உலகக் கோப்பை 2024: எதற்கும் நான் ரெடி.. பதில் தந்த விராட் கோலி.. மாற்றத்துக்கு தயாராகும் BCCI

Virat Kohli vs BCCI: டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்கு முன்னதாக, பிசிசிஐ மும்பையில் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியது. பல்வேறு நிலைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டனர். குறிப்பாக விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா குறித்து பேசப்பட்டது. ஐபிஎல் 2024 சீசனில் போது விராட் கோஹ்லியின் ஸ்டிரைக் ரேட் குறித்த விவாதிக்கப்பட்டதாகவும், அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் சீரற்ற பேட்டிங் ஃபார்ம் … Read more

நடப்பு ஐ.பி.எல்.தொடரிலிருந்து கான்வே விலகல்…. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சி.எஸ்.கே.அணியில் சேர்ப்பு

சென்னை, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரரான டேவான் கான்வே காயம் காரணமாக இந்த சீசனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின், தற்போது குணமடைந்து … Read more

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி! இந்த 4 பேருக்கு நிச்சயம் இடமில்லை!

T20 World Cup: மிகவும் எதிர்பார்க்கப்படும் 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழு, மே 1 ஆம் தேக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை வெளியிட உள்ளது. இந்தியாவின் T20 உலகக் கோப்பை அணியில் பல ஆச்சரியங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி இருக்கும் என்று … Read more

டி20 உலகக் கோப்பைக்கான அணி தேர்வு தொடர்பாக யாரையும் சந்திக்கவில்லை -ரோஹித் சர்மா

T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்டதற்கு, “அது உண்மை இல்லை” என நிராகரித்தார். இதுபோன்ற ஊகங்கள் மற்றும் வதந்திகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அணி தேர்வு குறித்த ஊடக … Read more

மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் 'இந்த' மாற்றம் – வெற்றி உறுதி… பதற்றத்தில் பஞ்சாப்

PBKS vs MI Match Review In Tamil: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 33வது லீக் தொடர் இன்று நடைபெறுகிறது. சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இவ்விரு அணிகளும் பலமாக காணப்பட்டாலும் இன்னும் முழுமையான வெற்றிப்பாதைக்கு இரு அணிகளும் செல்லவில்லை எனலாம். இரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளன, நான்கில் தோல்வி இரண்டில் வெற்றியாகும். … Read more

89 ரன்னில் ஆல் அவுட்டான குஜராத் அணி! எளிதாக வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!

Gujarat Titans vs Delhi Capitals: இந்தியன் பிரீமியர் லீக்கின் 32வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது. இரண்டு அணிகளுக்கும் வெற்றி தேவை என்பதால் இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். குஜராத் அணியில் கடந்த போட்டியில் விளையாடாத சஹா மற்றும் மில்லர் அணிக்கு திரும்பினர். … Read more

ரோகித், கோலி, இல்லை… அந்த 2 வீரர்கள் நன்றாக விளையாடினால் மட்டுமே இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லும் – மைக்கேல் வாகன்

புதுடெல்லி, 9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கடைசியாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின் கடந்த 17 வருடங்களாக டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான செமி பைனலில் … Read more

டி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு இவர் தான் தகுதியானவர் – ரிக்கி பாண்டிங் கருத்து

மும்பை, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் … Read more

" இது மறக்கமுடியாத தருணம்" – இந்திய ஆக்கி வீராங்கனை தீபிகா சோரெங்

புதுடெல்லி, இந்திய ஆக்கி வீராங்கனையான தீபிகா சோரெங், 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனைக்கு வழங்கப்படும் அசுந்தா லக்ரா விருதை வென்றார். கடந்த ஆண்டு ஜீனியர் ஆக்கி அணியில் அறிமுகம் ஆன தீபிகா சிறப்பாக செயல்பட்டார். கடந்த வருடம் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். அதில் 6 போட்டிகளில் விளையாடி 7 கோல்கள் அடித்த அவர், அந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த 2-வது … Read more

T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!

இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.  இந்திய அணியில் யார் யாரை தேர்வு செய்வது என்று தேர்வாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  ஒருசில வீரர்களின் இடங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் மற்ற இடங்களுக்காக கடுமையான போராட்டம் நிலவி வருகிறது.  ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.  அதன் படி ரோஹித் சர்மா தலைமையில் யார் யார் இடம் … Read more