ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் ரொனால்டோ – எம்பாப்பே

கெலோன், 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி, ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் கிலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து வரும் சனிக்கிழமை (6-ம் தேதி) நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் இவை இரண்டும் நேருக்கு நேர் மோத உள்ளன. கால்பந்து உலகின் இருபெரும் நட்சத்திரங்களான ரொனால்டோ … Read more

எம்.எஸ்.தோனி இல்லையென்றால் கோலியின் கதை எப்போதோ முடிந்திருக்கும் – பாக். முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்

கராச்சி, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வரும் அவர், இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடர் … Read more

டி20 உலகக்கோப்பை: விராட், பும்ரா அல்ல..அவர்தான் வெற்றிக்கு காரணம் – கிரெக் சேப்பல்

சிட்னி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்ட இந்தியா இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதுது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு தொடர் முழுவதும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை இந்திய அணியில் கொண்டு வந்து அதை செய்தும் காட்டிய ரோகித் சர்மா பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். அதேபோல தொடர் முழுவதும் … Read more

ரிஷப் பண்ட் செய்த நாசுக்கான வேலை! உலக கோப்பையை வெல்ல இதுதான் காரணம்?

கடந்த சனிக்கிழமையன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் அடித்த போதிலும், தென்னாப்பிரிக்க அணி கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலையில் இருந்தது. இருப்பினும் கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 42 பந்துகளில் 68 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி ரன்களை … Read more

இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்! ஜெய்ஷா சொன்ன வீரர் யார் தெரியுமா?

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய அணி தனது முதல் ஐசிசி பட்டத்தைத் வென்றுள்ளது. கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பையை தோல்வியடைந்த இந்திய அணி இந்த முறை டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. சனிக்கிழமையன்று பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்கள் மறுபுறம் கவலையிலும் உள்ளனர். இந்திய அணியின் ஜாம்பவான்கள் … Read more

எனது நண்பருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் – சச்சின்

புதுடெல்லி, வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்தும், டிராவிட் குறித்தும் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் பேசுகையில்,’வெஸ்ட் இண்டீசில் 2007-ம் ஆண்டு 50 … Read more

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?

இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. 2007ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி முதல் டி20 உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போது 2024ல் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இந்த உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. மேலும், இந்திய அணியின் தலைமைப் … Read more

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி

டாட்மண்ட், 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்று நடந்து வருகிறது. டாட்மண்டில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஜெர்மனி – டென்மார்க் அணிகள் மல்லுக்கட்டின. ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலேயே ஜெர்மனிக்கு கோல் கிட்டியது. ஆனால் அந்த அணியின் ஜோசுவா கிம்மிச், எதிரணி வீரரை தள்ளிவிட்டு ‘பவுல்’ செய்தது தெரிய வந்ததால் அந்த கோல் மறுக்கப்பட்டது. 35-வது நிமிடத்தின் போது திடீரென … Read more

என் கடைசி மூச்சு உள்ள வரை அவரை மறக்க மாட்டேன் – இந்திய வீரரை பாராட்டிய இர்பான் பதான்

மும்பை, ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது உலகக் கோப்பையை டோனி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அதன்பின் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பையை தற்போது இந்தியா வென்றுள்ளது. நீண்டகால உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்த இந்திய அணியினர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்கள். அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய … Read more

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்

லண்டன், டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. புல்தரையில் நடக்கும் இந்த போட்டியில் இந்தமுறை ஆண்கள் பிரிவில் நம்பர் 1 வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), 7 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 3-ம்நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான அல்காரஸ் (ஸ்பெயின்), … Read more