புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

புதுடெல்லி, 10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் 39-23 என்ற புள்ளி கணக்கில் யு … Read more

2024 டி20 உலக கோப்பை அட்டவணையில் திடீர் மாற்றங்களை செய்துள்ள ஐசிசி!

T20 World Cup 2024: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2024 டி20 உலகக் கோப்பை அட்டவணையில் சில மாற்றங்களை செய்துள்ளது. ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கும் இந்த 9வது டி20 உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்கள் கடந்த பிப்ரவரி 1 முதல் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த முறை உலக கோப்பை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.  டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஜூன் 1ம் தேதி நடைபெறும் … Read more

ஜெய்ஸ்வால் அடுத்த சூப்பர் ஸ்டார் – அப்போதே கணித்த ரோகித் சர்மா..! வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடிய இரட்டை சதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 35 ரன்கள் கூட அடிக்காத நிலையில் தனி ஒரு பிளேயராக இந்திய அணியை இரட்டை சதம் அடித்து வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார் அவர். இதனால் ஜெய்ஷ்வாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 179 ரன்களுடன் களத்தில் … Read more

எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; ஜான்சன் அபார ஆட்டம்…பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் வெற்றி

பார்ல், தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ. 20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஈஸ்டர்ன் கேப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஈஸ்டர்ன் கேப் தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கோ ஜான்சென் 31 பந்தில் 71 … Read more

Jaishwal double Century: இரட்டை சதம் அடித்து யஷஸ்வி ஜெய்ஷ்வால் சாதனை..!

விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 35 ரன்களுக்கும் மேல் அடிக்காதபோது தனி ஒரு பிளேயராக களத்தில் நின்று, இங்கிலாந்து அணிக்கு எதிரான சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு இப்படியொரு சாதனையை படைத்திருக்கிறார். இவர் ஒருவரின் பேட்டிங்கால் இந்திய அணி இப்போது வலுவான நிலைக்கு வந்திருக்கிறது. சிறப்பாக ஆடிய ஜெய்ஷ்வால் 209 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவர் அவுட்டானாதும் இங்கிலாந்து வீரர்கள் வரிசையாக … Read more

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி 241 ரன்னில் 'ஆல்-அவுட்'

கோவா, 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் கோவாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கோவா கிரிக்கெட் சங்க அகாடமி மைதானத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த கோவா அணி முதல் இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. … Read more

IND vs ENG: 3வது டெஸ்டில் ஷுப்மான் கில் இடத்தில் களமிறங்கும் சீனியர் வீரர்?

India vs England: கடந்த 2023 ஒருநாள் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தின் போது ஷுப்மான் கில்லுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டது.  இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவர் விளையாடவில்லை.  பின்பு மீதமுள்ள போட்டிகளில் விளையாடினார் கில். ஆனாலும் அவரால் பழைய பார்மிற்கு திரும்பமுடியவில்லை.  ஷுப்மான் கில் பேட்டின் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.  தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி … Read more

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்

இஸ்லாமாபாத், டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய டென்னிஸ் அணிக்கு மிகமுக்கிய பிரமுகர்கள்போல் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண மொத்தம் 500 பேருக்குதான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது. தொடக்க நாளில் நடக்கும் ஒற்றையர் ஆட்டத்தில் ராம்குமார் (இந்தியா)-அய்சம் … Read more

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சொத்து மதிப்பு மற்றும் காதலி யார் தெரியுமா? முழு குடும்ப பின்னணி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இருக்கும் யஷஸ்வி ஜெய்ஷ்வால், டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் என மூன்று பார்மேட்டுகளிலும் சர்வதேச கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டார். உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் அவர்,  ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுவது பலருக்கும் தெரிந்திருக்கும். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த சாதனை இவர் வசம் தான் இருக்கிறது. இப்படி பல சுவாரஸ்யங்களை வெளிக்காட்டாமல் வைத்திருக்கும் யஷஸ்வி … Read more

இந்திய மண்ணில் சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடி வருகிறார். அவருக்கு இப்போது வயது 41 ஆண்டு 187 நாட்கள். இந்த நிலையில், இந்திய மண்ணில் அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனைக்கு ஆண்டர்சன் சொந்தக்காரராகியுள்ளார். இதற்கு முன்பு இந்திய வேகப்பந்து வீச்சாளர் லாலா அமர்நாத் 1952-ம் ஆண்டு கொல்கத்தாவில் … Read more