புற்று நோய் முதல் இதய நோய் வரை… கருத்தடை மாத்திரைகளின் ஆபத்தான பக்கவிளைவுகள்

கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது கர்ப்பத்தைத் தடுக்க பெண்களுக்கு  மிகவும் எளிதான, ஒரு பயனுள்ள நடைமுறையாக கருதப்படுகிறது. ஆனால், அது பாதுகாப்பானது தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நாம் சில காரணனங்களுக்காக எடுத்துக் கொள்ளும், பிற வகை மருந்து மாத்திரைகளையும் போலவே, கருத்தடை மாத்திரைகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு என்கின்றனர் நிபுணர்கள். இதனை ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மருத்துவ நிபுணர்கள் இது பற்றி அளிக்கும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வோம். மூத்த மகப்பேறு மருத்துவரும், … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை; எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் – ஹர்மன்பிரீத் கவுர்

மும்பை, 10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரை முன்னிட்டு … Read more

சர்பிராஸ்கான் எதிர்காலத்தோடு விளையாடும் பிசிசிஐ, 2வது டெஸ்டில் ஆடுவது சந்தேகம்

Sarfaraz Khan Latest News : இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கிறார் சர்பிராஸ்கான். இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு விளையாடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுப்பதில்லை. மாறாக பெஞ்சிலேயே உட்கார வைக்கப்படுகிறார். வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் சேர்க்கப்பட்டிருந்தாலும், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை. இப்போது அந்த அணிக்கு எதிரான செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கும் வங்கதேச அணிக்கு … Read more

இரானி கோப்பை 2024: ரகானே தலைமையிலான மும்பை அணி அறிவிப்பு

மும்பை, இந்தியாவின் முக்கிய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், பிற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற ஒரு டெஸ்ட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இரானி கோப்பை போட்டி நடைபெற உள்ளது. 2023 – 24 ரஞ்சி கோப்பையை வென்ற … Read more

2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!

சென்னையில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நான்காவது நாளின் பாதியில் முடிவடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் 376 ரன்கள் அடித்தது. பிறகு ஆடிய வங்கதேசம் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சிறப்பாக விளையாடி 287 ரன்கள் அடித்து டிக்லர் செய்தது. ரிஷப் பந்த் மற்றும் கில் சதம் அடித்து இருந்தனர். 514 ரன்கள் என்ற … Read more

IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?

IND vs BAN Kanpur Test Pitch And Playing XI Changes: வங்கதேச அணி பாகிஸ்தானில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற கையோடு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி அதன் நீண்ட டெஸ்ட்  சீசனை தற்போது தொடங்கியிருக்கிறது.  அந்த வகையில், கடந்த 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் … Read more

சென்னை டெஸ்ட்; பீல்டிங்கில் இந்த 4 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் – பயிற்சியாளர் டி.திலீப்

புதுடெல்லி, வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற முதல் … Read more

அஸ்வின் எங்க நாட்டு வீரராக இருந்திருந்தால், ஓய்வு பெற சொல்லி இருப்பார்கள் – இங்கிலாந்து முன்னாள் வீரர்

லண்டன், வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் (வயது 38) ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னேவை அஸ்வின் சமன் செய்திருக்கிறார். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது … Read more

செங்டு ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பீஜிங், செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரப்லேல் மாடோஸ்-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் மாடோஸ்- இவான் டோடிக் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாம்ரி ஜோடி, பிரான்சின் சாடியோ … Read more

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம்: சென்னையில் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப்பதக்கங்களை வென்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் தமிழகத்தை சேர்ந்த அக்கா, தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் இன்று சென்னைக்கு திரும்பினர். அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கம் வென்று சென்னையில் கால் பதித்த பிரக்ஞானந்தா, வைஷாலி … Read more