விராட் கோலி, ரோகித் சர்மா எதிர்காலம் – கபில்தேவ் கருத்து

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரர்கள் விராட் கோலி (வயது 35) மற்றும் ரோகித் சர்மா (37). சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடருன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் மற்றும் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேசமயம் இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் கூறினர். விராட் கோலி நல்ல பிட்னஸ் கடை பிடிப்பதால் 2027 உலகக்கோப்பை வரை … Read more

டெஸ்ட் அணியில் இடம் பெரும் ஹர்திக் பாண்டியா? இந்த வீரரின் இடத்திற்கு ஆபத்து!

இந்திய அணியின் முக்கியமான பலிங் ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.  அவரது தனித்துவமான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முக்கியமான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். சமீபத்திய ஆண்டுகளில் இவரை போல ஒரு ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் ஹர்திக் பாண்டியா ஒயிட் பால்லில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய … Read more

சிஎஸ்கேவில் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால்… அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

MS Dhoni, IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான விதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர், 50 ஓவர்கள் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் என வரிசைக்கட்டி இந்திய அணிக்கு பல முக்கியமான தொடர்கள் இருந்தாலும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் மீதான இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் … Read more

இலங்கை வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்

துபாய், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டில் இலங்கை 63 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா (71.67 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் … Read more

வங்காளதேச அணிக்கு நான் பீல்டிங் செட் செய்ய அவர்தான் காரணம் – ரிஷப் பண்ட்

சென்னை, இந்தியா-வங்காளதேசம் இடையிலான சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா 376/10 (முதல் இன்னிங்ஸ்) மற்றும் 287/4 (2வது இன்னிங்ஸ்) ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி 149/10 (முதல் இன்னிங்ஸ்) மற்றும் 234/10 (2வது இன்னிங்ஸ்) எடுத்து தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் 2வது இன்னிங்ஸின் போது டிரிங்ஸ் பிரேக்கிற்கு பின் வங்காளதேச அணியின் கேப்டன் சாண்டோ பீல்டிங் செட் செய்து … Read more

ரச்சின் ரவீந்திரா போராட்டம் வீண்… பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை

காலே, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் 305 ரன்களும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 340 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 35 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை 309 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் கருணாரத்னே 83 ரன்கள் எடுத்தார். … Read more

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; மோர்ன் வான் விக் அதிரடி சதம்…ஐதராபாத்தை வீழ்த்திய குஜராத்

ஜோத்பூர், முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட்’ தொடரின் 3வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான டோயம் ஐதராபாத் அணி, ஷிகர் தவான் தலைமையிலான குஜராத் கிரேட்ஸ் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் சுரேஷ் ரெய்னா 44 ரன்கள் எடுத்தார். … Read more

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு இவர்கள் முக்கியம் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை … Read more

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் புதிய மாற்றங்கள்! இந்த விதி இனி இருக்காது?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது, காரணம் இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறும் இந்த மெகா ஏலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும். ஏனென்றால் தங்களுக்கு பிடித்த வீரர்கள் எந்த அணிக்காக விளையாடப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவனுடன் காத்துக் கொண்டு இருப்பார்கள். மற்ற ஆண்டு நடைபெறும் ஐபிஎல் ஏலத்தை விட இந்த … Read more

Duleep Trophy: சாம்பியன் பட்டம் வென்ற India A; ருதுராஜ் அப்செட் – சாய் சுதர்சனின் சதம் வீண்

Duleep Trophy 2024 Champions: துலிப் டிராபி 2024 தொடர் கடந்த செப். 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியா A, இந்தியா B, இந்தியா C, இந்தியா D என நான்கு அணிகள் இதில் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. மூன்று சுற்றுகளாக மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றன. முதல் சுற்று போட்டிகள் செப். 5ஆம் தேதியும், இரண்டாம் சுற்று போட்டிகள் செப். 12ஆம் தேதியும், மூன்றாம் சுற்று போட்டிகள் … Read more