ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய நிலை என்ன? வெளியான வீடியோ!

Hardik Pandya IPL 2024: மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.  தற்போது காயத்தில் அவதிப்பட்டு வரும் இவர் ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு மீண்டும் பிட்டாக இருக்க கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  அந்தவகையில் தற்போது ஹர்திக் பாண்டியா பந்துவீசத் தொடங்கி உள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் அணி இன்ஸ்டாகிராமில் பாண்டியா பவுலிங் பயிற்சி மற்றும் வலைகளில் பந்து வீசும் வீடியோவை பகிர்ந்துள்ளது.  2023 ஒருநாள் உலகக் கோப்பையின் … Read more

கருத்தாக பேசிய ஹர்ஷா போக்ளே… கடுப்பாகி வெளியேறிய பீட்டர்சன் – வர்ணனையில் நடந்தது என்ன?

Harsha Bhogle vs Kevin Peterson: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி (IND vs ENG 1st Test) ஹைதராபாத் நகரில் கடந்த ஜன. 25 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதன் ‘பாஸ்பால்’ அணுகுமுறை இந்தியாவில் கைக்கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இந்த தொடர் தொடங்கியது. சுணக்கம் காட்டிய இந்தியா  முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து … Read more

புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

பாட்னா, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் … Read more

2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 156 ரன்கள் தேவை

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 311 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.இதனை தொடர்ந்து 22 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்று ஆட்டநேர முடிவில் … Read more

புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் – புனேரி பால்டன் ஆட்டம் 'டிரா'

பாட்னா, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியரஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ்,தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் … Read more

அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்: வரலாறு படைத்த ரோகன் போபண்ணா

சிட்னி, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் இறுதி சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா) – மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெலி – ஆன்ரீயா வவாசோரி இணையை சந்தித்தது. 1 மணி நேரம் 39 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 7-6, (7-0), 7-5 என்ற செட்களில் மோன் போலெலி – ஆன்ரீயா வவாசோரி ஜோடியை … Read more

12 முறை பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்…

ஐதராபாத், இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வந்த இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் … Read more

பாண்டியா இல்லை, இவரு தான் உலகின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர் – கவாஸ்கர்

இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் 87 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜாவின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். கமெண்டரியில் இருந்த அவர், “ஜடேஜா பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் களத்தில் எவ்வாறு பங்களிக்கிறார் என்பதை பார்க்கும்போது, அவர் ஒருவேளை உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கலாம். சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.  இதேபோல், கில் ஆட்டம் குறித்தும் சுனில் … Read more

சுப்மான் கில் இப்படியா அவுட்டாவது?வெளுத்து வாங்கிய இந்திய அணியின் முன்னாள் வீரர்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் 23 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்திய அணியின் இளம் நட்சத்திரமாக இருக்கும் சுப்மான் கில் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பில் இருக்க, அவர் விக்கெட்டை பறிகொடுத்த விதம் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர், சுப்மான் கில் அவுட்டான விதத்தை கேள்வி எழுப்பியுள்ளார்.  சுனில் … Read more

வின்ஸ் மெக்மஹோன் பதவி விலகல்: பாலியல் துன்புறுத்தல், கடத்தல் குற்றச்சாட்டுகள் பரபரப்பு!

WWE-யின் இணை நிறுவனர் மற்றும் நீண்டுகால தலைவரான மெக்மஹோன், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து நிறுவனத்திலிருந்தும் அதன் தாய் நிறுவனமான TKO Group Holdings-லிருந்தும் பதவி விலகியுள்ளார். முன்னாள் WWE ஊழியர் ஜேனல் கிராண்ட், மெக்மஹோன் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளின் அறிக்கையின்படி, ஜேனல் கிராண்ட் அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற ஆவணங்களில், மெக்மஹோன் WWE-யின் தலைமை … Read more