இடது கை தோனி என இளம் வீரருக்கு பட்டம் சூட்டிய அஸ்வின்! யார் அந்த வீரர்

Ravichandran Ashwin: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திரமாக ரிங்கு சிங், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 69 ரன்களை விளாசினார். இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கிய ரிங்கு சிங், நங்கூரம் போல் நிலைத்து நின்று,ரோகித் சர்மாவுக்கு பக்கபலமாக விளையாடினார். விக்கெட்டை காப்பாற்றியதோடு, கட் ஷாட் மூலம் சில பவுண்டரிகளையும் எளிதாக விளாசினார். ரோகித் … Read more

Shivam Dube: டி20 உலக கோப்பையில் ஷிவம் துபே? டிராவிட் சொன்ன முக்கிய செய்தி!

Shivam Dube: ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பைக்கு இந்தியா தயாராகி வருகிறது.  எனினும் சில முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.  ஒருநாள் உலக கோப்பை போட்டியின் போது காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா இன்னும் சிகிச்சையில் இருந்து வருகிறார்.  உலக கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் மிகவும் அரிதானவை, அதிலும் திறமையான வீரர்கள் கிடைப்பது அபூர்வம். கபில் தேவுக்குப் பிறகு இந்திய அணியில் உள்ள பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான்.  இருப்பினும், 2021 … Read more

Ipl 2024: ஐபிஎல் தலைப்பு உரிமைக்கு இவ்வளவு கட்டணமா? விழி பிதுங்க வைக்கும் BCCI கட்டணம்

புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) டைட்டில் உரிமையை டாடா குழுமம் தக்கவைத்துக்கொண்டது. இதற்கான ஒப்பந்தம் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டாடா  குழும டாடா ஐபிஎல் என்ற டைட்டில் வைத்திருக்கும். 2022 இல் ஐபிஎல் தலைப்பு உரிமையைப் பெற்ற டாடா நிறுவனம். இந்தியன் பிரீமியர் லீக் ( Indian Premier League (IPL)) 2024 இன் வரவிருக்கும் பதிப்பில் மூன்றாவது முறையாக தனது டைட்டிலை தக்கவைத்துக் கொண்டுள்ளது.   IPL will continue to … Read more

நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே-க்கு கொரோனா ..!

ஆக்லாந்து, ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4வது ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவான் கான்வே இந்த போட்டியில் விளையாடவில்லை . டேவான் கான்வே-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் … Read more

கடைசி டி20: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை

கொழும்பு, ஜிம்பாப்வே அணி- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 1 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த ஜிம்பாப்வே அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து. 34 ரன்கள் வரை அடுத்த விக்கெட்டை இழக்காமல் விளையாடிய அந்த அணி 35 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது. அதனை … Read more

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

அடிலெய்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய … Read more

ஆர்சிபி கேப்டன் பதவி மீண்டுகம் கோலிக்கா…? டூ பிளேஸியால் ஏற்படும் மாற்றங்கள்!

IPL 2024 News In Tamil: நடப்பாண்டு ஜூன் மாதத்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் இந்த உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. முன்னதாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளன. இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்கா டி20 (SA20) தொடர் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெறும் S20 தொடர் ஐபிஎல் தொடரை போன்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த டி20 தொடரில் … Read more

ஆசிய கோப்பை கால்பந்து : உஸ்பெகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி

தோஹா, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசியன் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெறும். இதில் இந்தியா ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 0-2 … Read more

IND vs ENG: இந்த வீரர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம் – விளையாட வாய்ப்பே கிடைக்காது!

Cricket Latest News In Tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் (IND vs ENG Test Series) இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. வரும் ஜன.25ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் வரும் மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கிறது. இந்த தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  கடந்தாண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற ஓடிடி உலகக் கோப்பை … Read more

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி: சென்னையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) முதல்முறையாக தென்இந்தியாவில் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இன்று முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பேட்மிண்டன், நீச்சல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, ஸ்குவாஷ், யோகாசனம் உள்பட 26 பந்தயங்கள் இடம் பெறுகின்றன. இது தவிர தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி போட்டியாக சேர்க்கப்பட்டுள்ளது. … Read more