இன்னும் 6 ரன்…டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக விராட் கோலி படைக்கவிருக்கும் சாதனை…!

பெங்களூரு, இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இன்று நடைபெற உள்ள ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆட உள்ளது. அதேவேளையில் ஆறுதல் வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் விராட் கோலி 6 ரன்கள் எடுப்பதன் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினை படைக்க வாய்ப்பு … Read more

எஸ்.ஏ 20 ஓவர் லீக்; ஜோர்டான் ஹெர்மன் அபார ஆட்டம்…கேப்டவுன் அணியை வீழ்த்திய ஈஸ்டர்ன் கேப்

ஜோகன்ஸ்பர்க், 6 அணிகள் கலந்து கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – எம்.ஐ, கேப்டவுன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஈஸ்டர்ன் கேப் அணி ஜோர்டான் ஹெர்மனின் அதிரடி சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 202 ரன்கள் குவித்தது. … Read more

3வது டி20 போட்டி; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!

டுனெடின், ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பின் ஆலெனின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் … Read more

IND vs AFG: சஞ்சு சாம்சனை வாய்ப்பளிக்க வேண்டாம்… காரணத்தை கூறும் மூத்த வீரர்!

India National Cricket Team: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி (IND vs AFG 3rd T20) இன்று நடைபெற இருக்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வென்று, தொடரை வைட்வாஷ் செய்யும் முனைப்போடு எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணி (Team Afghanistan) பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சற்று முன்னேற்றம் காண வேண்டும் என்றாலும் அந்த அணியும் இந்த போட்டியை வென்று ஆறுதல் … Read more

புரோ கபடி லீக்; தபாங் டெல்லி – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

ஜெய்ப்பூர், 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. … Read more

MS Dhoni: தோனி மீது நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்! ஏன் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரரான மிஹிர் திவாகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தோனிக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்தவர்களில் திவாகரின் மனைவி சௌமியா தாஸும் ஒருவர்.  மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனமான ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் தோனி ஒப்பந்தம் செய்து இருந்தார். இந்தியாவிலும் உலகெங்கிலும் கிரிக்கெட் அகாடமிகளை நிறுவுவதற்கு இந்த ஒப்பந்தம் … Read more

2வது டி20 போட்டி; எர்வின் அபார ஆட்டம்…இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி…!

கொழும்பு, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று … Read more

IND vs AFG: ஜிதேஷ் சர்மா நீக்கம்! இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடியான இரண்டு மாற்றங்கள்!

IND Vs AFG 3rd T20: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள்  கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்ல இந்தியா தயாராக உள்ளது.  ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன் நடக்கும் கடைசி சர்வதேச டி20யாக இந்த போட்டி இருப்பதால், … Read more

ஹர்திக் பாண்டியாவிற்கு நோ! டி20 அணியில் ஷிவம் துபே! பிசிசிஐ அதிரடி!

Shivam dube: இந்த ஆண்டு டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.  ரோஹித் சர்மா இல்லை என்றால் ஹர்திக் பாண்டியா தான் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  மேலும் கடந்த ஆண்டு முழுவதும் இந்திய டி20 அணியை ஹர்திக் பாண்டிய வழிநடத்தி வந்தார். தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக ஹர்திக் விளையாடாததால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் அவரது தலைமையில் இந்தியா தொடரை … Read more

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இலங்கை… 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவுடன் இன்று மோதல்..!

கொழும்பு, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று … Read more