IND vs BAN: யாருக்கு அல்வா கொடுக்கப்போகிறார் கேஎல் ராகுல்? இந்த 2 பேருக்கும் பெரிய பிரச்னை!

India National Cricket Team Latest News Updates: இந்திய அணி அதன் நீண்ட டெஸ்ட் சீசனை வரும் செப். 19ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்குகிறது. உள்நாட்டில் வங்கதேசம், நியூசிலாந்துடன், வெளிநாட்டில் ஆஸ்திரேலியா உடனும் என மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அடுத்து விளையாட இருக்கிறது. அதாவது, இந்த 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியின் கடைசி 10 டெஸ்ட் போட்டிகள் இதுதான். இதன்பின் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் ஆகியவை … Read more

எதிரணி பேட்ஸ்மேன் 100 மீட்டர் சிக்சர் அடித்தபோது தோனி என்னிடம் கூறியது இதுதான் – தேஷ்பாண்டே

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 5 கோப்பைகளை … Read more

நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து.. காரணம் என்ன..?

கிரேட்டர் நொய்டா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் இன்று தொடங்க இருந்தது. ஆனால் கிரெட்டர் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மைதானத்தின் சில பகுதிகள் ஈரமாக இருந்தது. பலமுறை சோதனை செய்தும் போட்டியை இன்று தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூடபோடப்படாமல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இந்திய அணியில் இடம் பிடிக்க முகமது ஷமிதான் காரணம் – ஆகாஷ் தீப்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்காளதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து … Read more

IND vs BAN: விராட் கோலியால் வாய்ப்பை இழந்த இரண்டு இந்திய அணியின் வீரர்கள்!

IND vs BAN 1st Test: இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் முக்கியமானதாக இருக்கும். இந்திய அணி அடுத்ததாக பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் சொந்த மண்ணிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகள் மற்ற நாட்டிலும் விளையாட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா … Read more

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

ஹூலுன்பியர், 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்குகியது. 17-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: சினெர் – பிரிட்ஸ் பலப்பரீட்சை

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஜோகோவிச், அல்காரஸ் உள்பட பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு நம்பர் 1 வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி) மற்றும் 12-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) இருவரும் முன்னேறியுள்ளனர். இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு அரங்கேறும் இறுதிப்போட்டியில் சினெர்- டெய்லர் பிரிட்ஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். தினத்தந்தி … Read more

இந்த சாதனை எனது கால்பந்து வாழ்க்கையில் தனித்துவமானதாக இருக்கும் – ரொனால்டோ

லிஸ்பன், கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் தனது 900-வது கோலை அடித்தார். அவர் கிளப் போட்டிகளில் 769 கோலும், சர்வதேச போட்டிகளில் 131 கோலும் அடித்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனை குறித்து அவர் கூறுகையில், ‘இது (900 கோல்) எனக்கு முக்கியமானது. நான், இந்த மைல்கல்லை நீண்ட … Read more

துலீப் கோப்பை தொடரில் சிறந்த கேப்டன் திறனை காட்டியது இவர்தான் – டபிள்யூ வி ராமன்

பெங்களூரு, உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையில் இந்திய அணியின் புதிய கேப்டன்களை அடையாளம் காணும் பணியில் நான்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்திய ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில், இந்திய பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும், இந்திய சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும், இந்திய டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் இந்த நான்கு கேப்டன்களுமே பெரிய அளவில் தன்னுடைய கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் … Read more

துலீப் டிராபியில் விளையாடும் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது?

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டான துலீப் டிராபி 2024 சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மற்ற ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு நடைபெறும் இந்த துலீப் டிராபி கூடுதல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்திய அணியில் உள்ள நட்சத்திர வீரர்கள் பலர் இந்த போட்டியில் நான்கு அணிகளுக்காகவும் விளையாடுகின்றனர். அடுத்த ஆண்டு வரை இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டி விளையாட உள்ளதால் இந்த தொடர் அனைத்து வீரர்களுக்கும் உதவியாக இருக்கும். மேலும் இந்திய தேர்வாளர்களுக்கும் புதிய … Read more