வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்… டி காக் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது – எய்டன் மார்க்ரம்

மும்பை, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் டி காக் 174 ரன்கள் குவித்தார். இதையடுத்து ஆடிய வங்காளதேசம் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணி தரப்பில் … Read more

இந்தியாவின் முதல் தோல்வி இவரால் வரலாம்…! என்ன செய்யப்போகிறார் ரோஹித் சர்மா?

ICC World Cup 2023: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் தற்போது அனைத்து அணிகளும் பாதி கிணறை தாண்டிவிட்டன எனலாம். அதாவது, குறைந்தபட்சம் நான்கு போட்டிகளில் அனைத்து அணிகளும் விளையாடிவிட்ட நிலையிலும், எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பது இன்னும் முழுமையாக கூற முடியவில்லை. அரையிறுதியில் யார் யார்? இந்தியா (Team India), தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள்தான் தொடரின் தொடக்கத்தில் இருந்தே அரையிறுதிக்கு செல்ல தகுதியுடைய அணிகள் என வல்லுநர்கள் … Read more

தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி: வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் புலம்பல்

மும்பை, 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வங்காளதேசத்துடன் மும்பையில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்கியது. … Read more

'தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்' – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

சென்னை, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது. அதிரடியில் தூள் கிளப்பிய ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசுக்கு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது பேட்டை பரிசாக வழங்கி பாராட்டினார். பின்னர் பாபர் அசாம் நிருபர்களிடம் கூறியதாவது:- “இந்த தோல்வி எங்களை ரொம்பவே காயப்படுத்தி விட்டது. 280-290 … Read more

ஹர்திக் பாண்டியா வரமாட்டாரா…? அப்போ இன்னும் இந்த வீரருக்கு வாய்ப்பிருக்கு! – இந்த முறை மிஸ் ஆகாது!

Indian Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்திய அணி சமபலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை வீழ்த்திய பின் தற்போது ஒரு சிறிய ஓய்வில் உள்ளது. கடந்த 22ஆம் தேதி நியூசிலாந்து போட்டி நடைபெற்ற நிலையில், இந்தியாவின் அடுத்த போட்டி வரும் 29ஆம் தேதிதான் உள்ளது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் அந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை இந்திய அணி (IND vs ENG) எதிர்கொள்கிறது. … Read more

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்

புதுடெல்லி, ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வோன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் (221.1 புள்ளி) வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தார். இதில் சீன வீராங்கனைகள் ஜாங் யிபான் (243.7 புள்ளி) தங்கப்பதக்கமும், லூ ஜின்யாவ் (242.1 புள்ளி) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். தினத்தந்தி Related … Read more

வான்கடேவில் வங்கதேசத்தை வறுத்தெடுத்த தென்னாப்பிரிக்கா – டி காக், கிளாசென் சிக்ஸர் மழை!

ICC World Cup 2023, SA vs BAN: நடப்பு உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 382 ரன்களை குவித்து மிரட்டி உள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 174 ரன்களையும், கிளாசென் 90 ரன்களையும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 60 ரன்களையும் எடுத்தனர். இந்த இன்னிங்ஸில் 19 சிக்ஸர்களை பறக்கவிட்டது.

இங்கிலாந்து போட்டியில் ஹர்திக் பாண்டியா… வந்தாலும் பெரிய யூஸ் இல்லை? – இதுதான் காரணம்!

IND vs ENG, Hardik Pandya: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தொடங்குவதற்கு முன் யார் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று கேட்டால் பலரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா என கூறிவந்தனர். இந்தியாவை நான்காவது ஆப்ஷனாக கூறும் அளவில்தான் பலரும் கணிப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது யார் ஜெயிப்பார்கள் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு இந்தியா என்பார்கள். அந்தளவிற்கு நடப்பு தொடரில் இதுவரை வீழ்த்தப்படாத அணியாக இந்தியா … Read more

ஆட்டநாயகன் விருதை அகதிகளுக்கு சமர்பித்த சத்ரான்… ஆப்கான் – பாகிஸ்தான் எல்லையில் என்ன பிரச்னை?

Pakistan Vs Afghanistan: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup 2023) தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக சர்வதேச அளவில் பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இது அவர்களின் இரண்டாவது வெற்றியாகும். பட்டையை கிளப்பிய ஆப்கன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இங்கிலாந்து அணியை … Read more

சையத் முஷ்டாக் அலி; டெல்லியிடம் படுதோல்வி அடைந்த தமிழக அணி…!

டேராடூன், சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் தமிழக அணி டெல்லி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது. இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தமிழக அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தமிழக 13 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 67 ரன்னுக்கு ஆல் … Read more