ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி

ஐதராபாத், 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் – சென்னையின் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் கானர் ஷீல்ட்ஸ் ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஐதராபாத் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி. அணி … Read more

"தோல்வி எங்களை காயப்படுத்துகிறது" – பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்

சென்னை, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹாக்கும், அப்துல்லா சபீக்கும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. இமாம் உல் ஹாக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சபீக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் … Read more

பாண்டியா வந்தாலும் இவரை விட்டுறாதீங்க… உலகக் கோப்பையை வெல்ல அவர் ரொம்ப முக்கியம்!

Indian Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என முதல் ஐந்து போட்டியிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் டாப்பில் உள்ளது. சொந்த மண்ணில் நடப்பது கூடுதல் நன்மையை வழங்கினாலும், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் இந்தியா தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 15 பேரும் விளையாடிவிட்டனர் மேலும் தொடர் தொடங்கிய போதே … Read more

இந்திய சுழல் ஜாம்பவான பிஷன் சிங் பேடி காலமானார்

Bishan Singh Bedi Passes Away: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பாவனுமான பிஷன் சிங் பேடி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி 1967ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஜாம்பவான் பிஷன் சிங் பேடி … Read more

Video: கேட்டாரு கொடுத்துட்டாங்க… கை மாறிய பீல்டிங் பதக்கம் – இந்த முறை யாருக்கு தெரியுமா?

Indian Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) 21ஆவது லீக் போட்டி  தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று (அக். 23) நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா – நியூசிலாந்து (IND vs NZ) அணிகள் இந்த போட்டியில் மோதின.  தொடரும் வெற்றி பயணம் இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. நியூசிலாந்தில் டேரில் மிட்செல் 130, … Read more

வெற்றிப்பாதைக்கு திரும்புமா பாகிஸ்தான்..? – ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்

சென்னை, 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, மற்றொரு ஆசிய அணியான ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும் (நெதர்லாந்து, இலங்கைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 367 ரன்களை வாரி வழங்கிய பாகிஸ்தான், … Read more

சுயநலவாதியா விராட் கோலி… சூர்யகுமார் ரன் அவுட்டுக்கு யார் காரணம்?

Virat Kohli vs Suryakumar Yadav: நடப்பு உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) இந்தியா – நியூசிலாந்து அணிகள் (IND vs NZ) மோதிய லீக் போட்டி நேற்று நடைபெற்றது. தரம்சாலா நகரில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. மேலும், இந்த தொடரில் இதுவரை தோல்வியே தழுவாமல் மிக வலுவான நிலையிலும் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என … Read more

ஐ.டி.எப். டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் 'சாம்பியன்'

தார்வாத், கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் ஐ.டி.எப். டென்னிஸ் போட்டி நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் 7-6 (7-5), 7-6 (8-6) என்ற நேர் செட்டில் சக நாட்டவர் திக்விஜய் பிரதாப் சிங்கை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் சென்னையைச் சேர்ந்த ராம்குமாருக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகையுடன் 20 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. தொடர்ந்து கர்நாடகா டென்னிஸ் சங்கம் சார்பில் நடந்த … Read more

'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். முதலிடம்

சென்னை, சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் கடைசி நாளான நேற்று நடந்த ஆட்டங்களில் ஐ.சி.எப் அணி 25-20, 17-25, 25-22, 28-26 என்ற செட் கணக்கில் வருமான வரியையும், ஐ.ஓ.பி. 25-15, 26-24, 24-26, 25-21 என்ற செட்டில் எஸ்.ஆர்.எம். அணியையும் வீழ்த்தியது. லீக் முடிவில் … Read more

ஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் சாதனை

புதுடெல்லி, ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் செங்டுவில் நடந்தது. இதில் சிறுவர்களுக்கான 15 வயதுக்குட்பட்டோர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் போர்னில் ஆகாஷ் சாங்மாய் 21-19, 21-13 என்ற நேர் செட்டில் பேன் ஹாங் சூவானை (சீனா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். அசாமை சேர்ந்த 13 வயதான போர்னில், இந்த பிரிவில் மகுடம் சூடிய 2-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். 17 வயதுக்குட்பட்டோர் சிறுமியர் பிரிவில் இந்தியாவின் தன்வி ஷர்மா 17-21, 21-11, 19-21 … Read more