ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோவா வெற்றி

புவனேஸ்வர், 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-எப்.சி. கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் நாரோம் மகேஷ் சிங் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கோவா அணி சார்பில் சந்தேஷ் ஜின்கன் 74-வது நிமிடத்திலும், விக்டர் 75-வது நிமிடத்திலும் தலா … Read more

SA vs ENG: ஹென்றி கிளாசன் – யான்சென் சரவெடி! அரண்டுபோன இங்கிலாந்து – தெ.,ஆப்பிரிக்கா அதிரடி

அதிரடியும், சரவெடியுமாக முடிந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை போட்டியின் முதல் இன்னிங்ஸ். டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங் பிட்ச் என்பதால் சேஸிங் ஈஸியாக செய்யலாம் என நினைத்து பந்துவீச்சை எடுத்துவிட்டார். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் இருந்த பவர் ஹிட்டர்ஸ், அடிப்பதை தவிர வேறுவழியில்லை என நினைத்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்துவிட்டார்கள். இன்னிங்ஸ் தொடங்கியபோது தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் டிகாக் மட்டும் 4 … Read more

SL vs NED: இலங்கையின் மோசமான பவுலிங் – 6 விக்கெட்டுக்கு பிறகு கெத்து காட்டிய நெதர்லாந்து..!

உலக கோப்பை 2023 தொடரில் நெதர்லாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முந்தயை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய அந்த அணி அதே உத்வேகத்துடன் இலங்கை அணியை எதிர்கொண்டது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய நெதர்லாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவில்லை. இலங்கை அணியினரின் சிறப்பான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறி கொடுத்து பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் அக்கர்மேன் மட்டும் அதிகபட்சமாக 29 ரன்கள் … Read more

ஹர்த்திக் பாண்டியா இடத்துக்கு 3 வீரர்கள் போட்டி – வாய்ப்பு யாருக்கு?

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியே சென்ற அவர், ஸ்கேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனையின் முடிவில் பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் தர்மசாலாவில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில்  அவர் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் யார் களமிறக்கப்படுவார்கள் என்பது கேப்டன் … Read more

உத்தரவாதம் கொடுக்க முடியாது… ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக சம்பவம் இருக்கு – ரோகித் சர்மா பளீர்

உலக கோப்பை தொடரின் அடுத்த லீக் போட்டியில் இந்தியஅணி நியூசிலாந்து அணியை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. தர்மசாலாவில் இப்போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைப்பார்கள். இப்போதைக்கு நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி பின்தங்கியுள்ளது. ஐசிசி தொடர்களை பொறுத்தவரை இந்திய … Read more

'கோலியின் சதத்தை தடுக்க நினைக்கவில்லை' – வங்காளதேச அணியின் கேப்டன் விளக்கம்

புனே, புனேயில் நேற்று முன்தினம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி 97 ரன்னில் இருந்த போது, 42-வது ஓவரை வீசிய வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் நசும் அகமது முதல் பந்தை லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசினார். அதனை வைடு என்று நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரோக் அறிவிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நடுவர் வைடு கொடுக்கவில்லை. அந்த ஓவரின் 3-வது பந்தில் விராட்கோலி (103 ரன்) சிக்சர் தூக்கி … Read more

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஒடென்ஸ், டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்கை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-19, 21-12 என்ற நேர்செட்டில் சுபனிதாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 47 நிமிடமே தேவைப்பட்டது. சிந்து அரைஇறுதியில் முன்னாள் … Read more

'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணி 5-வது வெற்றி

சென்னை, சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் டி.ஜி.வைஷ்ணவா அணி 18-25, 25-16, 25-19, 25-12 என்ற செட் கணக்கில் சுங்கா இலாகாவை தோற்கடித்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய டி.ஜி.வைஷ்ணவா பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இது சுங்க இலாகா தொடர்ந்து சந்தித்த 6-வது தோல்வியாகும். மற்றொரு … Read more

ஜாம்பா அபார பந்துவீச்சு…பாகிஸ்தானை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா…!

பெங்களூரு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைப்பெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் பெங்களூருவில் ஆடின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், மார்ஷ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த இணை மைதானத்தில் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி சதம்…'புஷ்பா' ஸ்டைலில் கொண்டாடிய டேவிட் வார்னர் – வீடியோ…!

பெங்களூரு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி சதத்தால் 367 ரன்கள் குவித்தது. இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 124 பந்தில் 163 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சதம் அடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த வார்னர் சதம் அடித்ததை புஷ்பா பட ஸ்டைலில் கொண்டாடினார். தற்போது இந்த வீடியோ … Read more