ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது

ஹாங்சோவ், – ரோகன் போபண்ணா ஜோடி அசத்தல் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி தொடரில் 8-வது நாளான நேற்று நடந்த டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசெல் இணை 2-6, 6-3, (10-4) என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சங் ஹோ ஹாங்-என் ஷோ லியாங் … Read more

இரானி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இன்று மோதல்

ராஜ்கோட், ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஹனுமா விஹாரி தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் மயங்க் அகர்வால், சாய் சுதர்சன், நவ்தீப் சைனி, சர்ப்ராஸ்கான் உள்ளிட்ட வீரர்களும், ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியில் புஜாரா, ஹர்விக் தேசாய், ஷெல்டன் ஜாக்சன் உள்ளிட்ட வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். தினத்தந்தி Related Tags : இரானி … Read more

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டி பாதியில் கைவிடப்பட்டது

திருவனந்தபுரம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் இந்த ஆட்டம் 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் சுமித் 55 ரன்னும், கேமரூன் கிரீன் 34 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 14.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 84 ரன்கள் … Read more

1975 மற்றும் 1979 நினைவுகள்: விடியல் கண்ட உலகக் கோப்பை… வேர்களை பரப்பிய கிரிக்கெட்டின் கதை!

World Cup Memories: ஒருநாள் வடிவத்திற்கான உலகக் கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதுவரை 12 ஐசிசி தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அதிகமாக 5 முறை கோப்பையை கைப்பற்றியிருக்கிரது. அதேபோல், இந்தியா 2 முறையும், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா 1 முறையும் சாம்பியனாகி உள்ளன. வெறியில் 10 அணிகள் இந்த அணிகள் தற்போதைய உலகக் கோப்பை தொடரை வென்று தங்களின் கோப்பை கணக்கை அதிகப்படுத்திக்கொள்ள துடித்துக்கொண்டிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, … Read more

ரோஹித் சர்மானா பயம்… உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய பௌலர் சொன்ன அந்த வார்த்தை!

ICC World Cup 2023, Rohit Sharma: உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் போட்டிகள் வரும் அக். 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 10 அணிகள் மோதும் இந்த தொடர், 10 வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணி அரையிறுதிக்கு செல்லும். வரும் நவ. 19ஆம் … Read more

‘இது என் கடைசி உலக கோப்பை’ ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கம்

உலக கோப்பைக்கான இந்திய அணி உலக கோப்பைக்கான இந்திய அணியில் கடைசிநேரத்தில் அக்சர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். முதன்முறையாக உலக கோப்பை அணி தேர்வு குறித்த பேச்சு எழும்போது அஸ்வின் பெயர் பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. திடீரென அக்சர் படேல் காயமடைந்ததால் அதிர்ஷ்ட காற்று அஸ்வின் பக்கம் வீசியது. ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு அவர் அழைக்கப்பட்டார். அதில் அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை … Read more

போட்டியே நடக்காது, ஆனா கப்பு ஜெய்க்கலாம்; உலக்கோப்பைக்கு வார்னிங் கொடுக்கும் மழை

IND vs ENG Warm Up Match: உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பயிற்சி ஆட்டங்களும் நேற்று முதல் தொடங்கின. நேற்றைய முதல் நாளில் இலங்கை அணியை வங்கதேசமும், பாகிஸ்தான் அணியை நியூசிலாந்தும் வீழ்த்தின. திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து, இன்றும் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் திட்டமிடப்பட்டன. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி கௌகாத்தியிலும், … Read more

உலக கோப்பை 2023: இந்தியா, பாகிஸ்தானுக்கு வாய்ப்பில்லை… இந்த அணி தான் வெல்லும் – கவாஸ்கர்

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட்டின் உட்சபட்ச திருவிழாவான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 5 ஆம்தேதி தொடங்குகிறது. முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் எல்லாம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் சொந்த மண்ணில் இந்திய அணி உலக கோப்பையை விளையாடுவதால் மீண்டும் ஒருமுறை உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில், அதற்கு நேர்மாறான கணிப்பை வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். … Read more

இந்த உலகக் கோப்பையை ஆளப்போகும் 5 ஸ்பின்னர்கள் இவர் தான்… எழுதி வச்சுக்கோங்க!

ICC World Cup 2023, Spinners: உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்றே தொடங்கிவிட்டன. அனைத்து அணிகளும் தங்களின் பலத்தை நிரூபித்து இந்த உலகக் கோப்பையை முத்தமிட தயாராகி வருகின்றன. இந்த தொடர் முழுக்க இந்திய மண்ணில் நடைபெற இருக்கும் நிலையில், தொடரில் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என்பதை கண்ணை முடிக்கொண்டு யார் வேண்டுமானாலும் சொல்லி விடுவார்கள் எனலாம்.  குறிப்பாக, வரும் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) அதிக … Read more

PAK vs NZ: பாகிஸ்தான் பவுலிங்கை பஞ்சராக்கிய கருப்பு படை…. முரட்டு அடி

பயிற்சி ஆட்டம் தொடக்கம் கிரிக்கெட்டின் உட்சபட்ச திருவிழாவான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது என்றாலும், பயிற்சி ஆட்டங்கள் அல்ரெடி தொங்கிவிட்டன. பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் நேற்று விளையாடிய நிலையில் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தை தற்போதைய சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக தொடங்குகிறது. இந்த முறை உலக கோப்பை வெல்லும் அணிகளுக்கான வாய்ப்பில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை பலர் தேர்வு செய்திருக்கிறார்கள். … Read more