ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று மோதல்

கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதி சுற்றை எட்டும் மற்றொரு அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இந்தியாவுக்கு எதிராக தோற்றும், வங்காளதேசத்தை வீழ்த்தியும் தலா … Read more

'தற்போதைய தருணத்தில் ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை' – சாய்னா நேவால் பேட்டி

புதுடெல்லி, பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் அலங்கரித்தார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியா மாஸ்டர்சுக்கு பிறகு எந்த பட்டமும் வெல்லவில்லை. கடைசியாக கடந்த ஜூன் மாதம் … Read more

Asia Cup 2023: இந்திய அணியில் இந்த 3 வீரர்களுக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு?

கொழும்பில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடந்த 3 நாட்களாக இடைநில்லா கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். முதலில், ரோஹித் சர்மா தலைமையிலான அணி மழை காரணமாக இரண்டு நாட்கள் பாகிஸ்தானுடன் விளையாடியது, பின்னர் அவர்கள் இலங்கைக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் விளையாடினர். இப்போது இந்தியா இரண்டு ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. ODI உலகக் கோப்பை 2023 சீசன் வரவிருக்கும் நிலையில் – பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் ஒரு சில வீரர்கள் ஓய்வெடுப்பதை … Read more

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் தொடர்ந்து முதலிடம்

துபாய், ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (863 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் (759) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். 2-வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் … Read more

ஜோடியாக ரன்களை குவிக்க கெமிஸ்ட்ரி அவசியம்! உலகின் சிறந்த பேட்டிங் ஜோடிகள்

புதுடெல்லி: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரன்களை பேட்டர் குவிப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அதிலும், சில கிரிக்கெட்டர்களுக்கு கெமிஸ்ட்ரி ஒத்துப்போய் ரன்மழை குவித்து அசத்துவார்கள். ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, ஜோடியாக இணைந்தால் அசரடிக்கும் பேட்டர்களின் ரன்மழை ஆகும். கிரிக்கெட்டர்களின் நம்ப முடியாத கெமிஸ்ட்ரி, ரசிகர்களுக்கு ரன் விருந்து படைத்துள்ளது. சில பேட்டிங் பார்ட்னர்ஷிப்கள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத தருணங்களை உருவாக்கியுள்ளன. இந்தப் பட்டியலில், ODI கிரிக்கெட் வரலாற்றில், அதிக … Read more

குட்டி மலிங்கா போல் வந்தாச்சு அச்சுஅசலா குட்டி அக்தர் – நடை உடை அப்படியே இருக்கே!

மிரட்டிய சோயிப் அக்தர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பல ஆண்டுகளாக கோலோச்சினார். அவரின் புயல் வேகம் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும். கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெய்சூரியா, ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகியோரே எதிர்கொள்ள அஞ்சிய பந்துவீச்சாளராக இருந்தார். அவரின் புயல் வேக தாக்குதலுக்கு ஈடு கொடுத்து நிற்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணமல்ல. அவரின் ஓய்வுக்குப் பிறகு அவரைப் போல இன்னொரு பந்துவீச்சாளரை … Read more

’லவ் யூ விராட் கோலி’ பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டும் எல்லை கடந்த அன்பு

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு இருக்கும். மைதானத்திலும், ஆன்லைனிலும் ரசிகர்களின் ஆக்ரோஷத்தை உட்சபட்சமாக பார்க்கலாம். இந்த நிலை அண்மைக்காலமாக மாறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கிரிக்கெட் போட்டியை வெறுப்புணர்வோடு பார்த்த காலம் கடந்து, உணர்ச்சியின் அடிப்படையில் இல்லாமல் ஒரு விளையாட்டாக பார்க்கும் காலம் வந்துவிட்டதை இது காட்டுகிறது. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளின்போது இரு நாட்டு ரசிகர்களும் சகோதரத்துவத்தையும், அன்பையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களை அதிகமாக பார்க்க … Read more

தொடர்ந்து 14 முறை…ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை அணி…!

கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்க 3 அணிகள் போட்டி

துபாய், கிரிக்கெட் தரவரிசை 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தரவரிசையில் நம்பர் ஒன் அந்தஸ்துடன் நுழையப்போகும் அணி எது? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (121 புள்ளி), பாகிஸ்தான் (118), இந்தியா (115), நியூசிலாந்து (106), இங்கிலாந்து (99) ஆகிய … Read more

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் கிரண்ஜார்ஜ் தோல்வி

கோலூன், ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோலூன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் கடந்த வாரம் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 20-22, 21-14, 14-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜூன் ஹாவ் லியோங்கிடம் தோற்று பிரதான சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார். இதேபோல் இந்திய வீரர்கள் மிதுன் மஞ்சுநாத், ரவி ஆகியோர் முறையே … Read more