பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் 'டிரா'

ஆம்ஸ்டெல்வீன், 15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி, நேற்று தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 9-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் இசபெல்லா பீட்டரும், 28-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியாவின் வந்தானா கட்டாரியாவும் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் இன்று மோதல்

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. மூன்று நாள் இடைவெளிக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: ஜெர்மனி வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் ஜூலே நீமையர் (ஜெர்மனி) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் உள்ளூர் வீராங்கனை ஹீதர் வாட்சனை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 22 வயதான நீமையர் தனது அறிமுக விம்பிள்டன் தொடரிலேயே கால்இறுதியை எட்டி கவனத்தை ஈர்த்துள்ளார். மற்றொரு ஜெர்மனி வீராங்கனை தாட்ஜனா மரியா 5-7, 7-5, … Read more

சாத்தூரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி

விருதுநகர் சாத்தூர், சாத்தூரில் புனித தனிஸ்லாஸ் மேல்நிலைப்பள்ளியில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, தேனி, நாகர்கோவில், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் சிவகாசி அணியினர் முதல் பரிசையும், நாகர்கோவில் அணியினர் 2-வது பரிசையும், விருதுநகர் அணியினர் 3-வது பரிசையும் வென்றனர். போட்டிக்கான … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: பிரான்ஸ் வீராங்கனையிடம் வீழ்ந்தார் ஸ்வியாடெக்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), 37-ம் நிலை வீராங்கனை அலிசே கோர்னெட்டை (பிரான்ஸ்) சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த கோர்னெட் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் சர்வதேச டென்னிசில் தொடர்ச்சியாக … Read more

விம்பிள்டன் : கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா – மேட் பாவிக் (குரோஷியா ) இணை டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் (ஸ்பெயின்) – நடேலா டிசலமிட்ஸே (ஜார்ஜியா ) இணையை எதிர்கொண்டனர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4 3-6, 7-6(3) … Read more

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்ப்பு

பர்மிங்கம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது. போட்டியின் 2-ம் நாள் நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து … Read more

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

பர்மிங்காம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதிரடியா விளையாடிய பண்ட் 146 ரன்களும் ,ஜடேஜா 104 ரன்களும் ,பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய … Read more

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்து பும்ரா உலக சாதனை

பர்மிங்காம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதிரடியா விளையாடிய பண்ட் 146 ரன்களும் ,ஜடேஜா 104 ரன்களும் ,பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் இந்திய கேப்டன் … Read more

5-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்ப்பு

பர்மிங்கம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில், புஜாரா களமிறங்கினர். கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த விஹாரி 20 ரன்னில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் அவுட் ஆகி … Read more