ரஞ்சி கிரிக்கெட்: ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி 773 ரன்கள் குவிப்பு
பெங்களூரு , ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால்-ஜார்கண்ட் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பெங்கால் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 577 ரன்கள் எடுத்து இருந்தது. மனோஜ் திவாரி 54 ரன்களுடனும், ஷபாஸ் அகமது 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. … Read more