'பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பந்துவீச்சு தான்'- விராட் கோலி

கொழும்பு, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கியது இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான … Read more

தூரந்த் கோப்பை கால்பந்து ; கோவா எப்சி அணியை வீழ்த்தி மோகன் பகான் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்…!!

கொல்கத்தா, 132-வது தூரந்த் கோப்பை கால்பந்து தொடர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் மோகன் பகான் மற்றும் கோவா எப்சி அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். முதல் பாதியில் இரு அணிகளுமே 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மோகன் பகான் மேலும் ஒரு கோல் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், மெட்விடேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், தென் ஆப்பிரிக்க வீரர் லாயிட் ஹாரிஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் அல்காரஸ் 6-3, 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஹாரிசை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு … Read more

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆண் குழந்தை…!!

புது டெல்லி, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி முன்னாள் கால்பந்து வீரர் சுப்ரதா பட்டாச்சார்யாவின் மகள் சோனம் பட்டாச்சார்யாவை நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சோனம் கர்ப்பமாக இருப்பதை சேத்ரி கடந்த ஜூன் மாதம் நடந்த இன்டர்காண்டினென்டல் கோப்பை தொடரில் விளையாடும் போது அறிவித்திருந்தார். அதில் நடந்த ஒரு போட்டியில் சேத்ரி கோல் அடித்த பிறகு பந்தை எடுத்து சட்டைக்கு அடியில் வயிற்று பகுதியில் வைத்துக்கொண்டு … Read more

இந்தியாவில் கிடைக்காத வாய்ப்பு….இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாட தேர்வான சாய் சுதர்சன்…!

லண்டன், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார். இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான … Read more

ஆசிய கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் மோதும் பல்லேகலே மைதான பிட்ச் ரிப்போர்ட்

சேஸிங் அணி அதிக வெற்றி ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பல்லக்கலே மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்க இருக்கிறது. இந்த மைதானத்தில் 33 ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 14 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சேசிங் செய்த அணிகள் 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி மட்டும் முடிவு இல்லை. டிஆர்எஸ் விதிமுறை தீர்வு இலங்கை-வங்காளதேசம் ஆசியக் … Read more

ஆசிய கோப்பை 2023: இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியில் அந்த அணி நேபாளத்தை எதிர்கொண்டு 200 ரன்களுக்கும் மேலான வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் இலங்கை அணி சிறப்பாக பந்துவீசி வங்கதேச அணியை 200 ரன்களுக்கும் குறைவாக கட்டுப்படுத்தியதுடன், அதனை சேஸ் செய்து தங்களது வெற்றிக் கணக்கை தொடங்கினர். இந்திய அணியைப் பொறுத்தவரை தங்களது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் … Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் லேட்டஸ் அப்டேட்

புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2023 போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதலைத் தவிரவும், பிற போட்டிகளையும் நீங்கள்  வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு ரசிக்கலாம். இந்தியா vs பாகிஸ்தான் மற்றும் பிற ஆசியக் கோப்பை 2023 போட்டிகளை ஆன்லைனில் இலவசமாகப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள். அனைத்து ஆசிய கோப்பை போட்டிகளையும் மொபைல் போன்களில் இலவசமாக பார்க்கலாம். ஆசிய கோப்பை 2023 போட்டித்தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து … Read more

டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

புதுடெல்லி: உலகின் புதிய ஈட்டி எறிதல் சாம்பியனாக மகுடம் சூட்டிக் கொண்ட மூன்றே நாட்களில், நீரஜ் சோப்ரா மற்றொரு சாதனையை அடைந்துள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தனது பதக்கப் பட்டியலில் மற்றுமொரு வெள்ளியை சேர்த்துள்ளார். ஜூரிச் டயமண்ட் லீக் ஜெர்மனியில் நீரஜ் சோப்ரா பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சமீபத்தில் ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாம்பியனாக பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா … Read more

சஞ்சு முதல் யுவராஜ் வரை: யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்து நீக்கப்பட்ட 4 இந்திய வீரர்கள்

உலக கிரிக்கெட்டில் கோலோச்சும் அணிகளில் இந்திய அணி ஒன்று. இந்த அணியில் இடம்பிடிப்பது என்பதெல்லாம் குதிரை கொம்பு கணக்கு தான்.  பிளேயிங் லெவனில் இல்லை, 14 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றாலும் யோயோ என்ற உடல் தகுதி டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். அந்த டெஸ்டில் பாஸாக கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பெண்களை பெறும் வீரர்களே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் கிரிக்கெட்டில் ஸ்டார் பிளேயர்களாக இருந்தும் யோயோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் … Read more