Asia Cup 2023: மினி உலகக் கோப்பைக்கு ரெடியா… நாளை முதல் எப்போது, எதில் இலவசமாக காணலாம்?

Asia Cup 2023: ஆசியக் கோப்பை தொடர் நாளை (ஆக. 30) முதல் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முல்தானில் உலக நம்பர் 1 ஓடிஐ அணியான பாகிஸ்தான், நேபாளத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை ‘ஹைப்ரிட் மாடலில்’ பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. இந்தியாவின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் அதே வேளையில் பாகிஸ்தான் சில போட்டிகளை முல்தான் மற்றும் லாகூரில் விளையாடும். பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் … Read more

INDVsPAK: பல்லேகலேயில் பாகிஸ்தானை இந்தியா வெல்லும் ஏன்? ஆசிய கோப்பை 2023 அப்டேட்

2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வென்ற பிறகு, இவ்விரு அணிகளும் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் மோதிக் கொள்ளவில்லை. இலங்கையின் கண்டியில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி மீண்டும் மோத இருக்கின்றன. இப்போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. போட்டியை பாகிஸ்தான் நடத்தினாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி அங்கு செல்ல மறுத்துவிட்டது. இதனால் இப்போட்டி இலங்கையில் நடத்தப்படுகிறது.   எப்போது இந்தியா … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப்; மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்தியாவின் பருல் சவுத்ரி 11வது இடம்

புடாபெஸ்ட், 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகின்றன. இதில் நடந்த மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார். மேலும் பந்தய தூரத்தை 9.15.31 நிமிடங்களில் கடந்து புதிய தேசிய சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலம் அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். தினத்தந்தி Related Tags : உலக தடகள சாம்பியன்ஷிப்  ஸ்டீப்பிள் சேஸ்  பாருல் சவுத்ரி  … Read more

Fact Check: பாபர் அசாம் சகோதரி உறவு பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா?

பாபர் அசாமுடன் ஒரு பெண் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வேகமாக பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படத்தின் கேப்சனில் பாபர் அசாம் தன்னுடைய சகோதரியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவருடன் எடுத்த புகைப்படம் தான் இது என்று எழுதப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் பலரும் உண்மை தன்மை குறித்து தேடத் தொடங்கினர். அதில் பாபர் அசாமுடன் இருக்கும் பெண், அவரது உறவுக்கார பெண் தான். ஆனால் அவரை பாபர் அசாம் … Read more

ஆசிய கோப்பை தொடர்; சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி…!

புதுடெல்லி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த உலகக்கோப்பை தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஆசிய அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளும். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் விலகல்…!

மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டி 20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வெல் … Read more

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – ஜாஸ் பட்லர்

லண்டன், கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இயான் மோர்கன் தலைமையில் கைப்பற்றிய இங்கிலாந்து அணியானது இம்முறை ஜாஸ் பட்லரின் தலைமையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. ஜாஸ் பட்லர் தலைமையிலான இந்த இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டு வரும் இவ்வேளையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்கள் குறித்து ஜாஸ் பட்லர் … Read more

Neeraj Chopra: தங்க மகன் நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா…?

Neeraj Chopra Net Worth: ஹங்கேரி நாட்டின் புடாஃபெஸ்ட் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா முதல்முறையாக தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்த முதல் இந்தியரும் இவர்தான்.  ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் நாட்டின் தங்கமகன் என்று அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா இரண்டாவது முயற்சியிலேயே 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை … Read more

ஆசிய கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு…!

காபூல், இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடருக்கு இன்னும் … Read more

தங்கமகன் நீரஜின் கிரீடத்தில் மற்றுமொரு மயிலிறகு! உலக தடகள தங்கம் வென்ற சோப்ரா

புடாபெஸ்ட்: இந்தியாவிற்கு மீண்டும் ஒரு தங்கம் வென்று தங்க மகன் நீரஜ் சோப்ரா சாதனை செய்துள்ளார். உலக தடகளத்தின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் (budapest) நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்துக் கொண்டார். Javelin thrower Neeraj Chopra wins India’s first gold medal at … Read more