"என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்…": நிதானத்தை இழந்த ரோகித் சர்மா

கண்டி, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. இலங்கையின் கண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன் பிசிசிஐ தலைமை தேர்வாளர் … Read more

’ஆணவத்திற்கும் அதிகாரப் பசிக்கும்…' கம்பீரை சாடிய சேவாக்!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரேந்திர சேவாக் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என ஜெர்சியில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த பதிவு அரசியல் தளத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதில் கவுதம் காம்பீரை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒரு … Read more

Asia Cup 2023: செப். 10இல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி… மீண்டும் மழை வந்தால் என்ன ஆகும்?

Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடர் தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இன்றுடன் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்து சூப்பர்-4 சுற்று நாளை (செப். 6) தொடங்க உள்ளது. இன்றைய கடைசி குரூப்-சுற்று போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில், இலங்கை அணி வங்கேதச அணியை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் குரூப் பி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திடம் … Read more

விராட் கோலி தான் அந்த பட்டப் பேரு வச்சாரு – சிலாகிக்கும் முகமது ஷமி

இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு இருக்கும் ரசிகர்களைப் போலவே முகமது ஷமிக்கு ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள் அவரை ‘லாலா’ என்று அன்புடன் அழைப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஷமிக்கு இந்த செல்லப்பெயர் வைத்தது யார் தெரியுமா? இப்போது இந்திய அணியில் இருக்கும் முன்னாள் கேப்டனான விராட் கோலி தான் இந்தப் பெயரை வைத்தாராம்.  கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரரைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள … Read more

ICC World Cup 2023: இந்திய அணி அறிவிப்பு… உலகக் கோப்பையில் யார் யாருக்கு வாய்ப்பு?

Indian Team World Cup Squad: ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.   இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் … Read more

ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! முக்கிய வீரரை நீக்க பிசிசிஐ முடிவு!

India Squad ODI World Cup 2023: 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று பிற்பகல் 1 மணிக்கு அறிவிக்க உள்ளது.  இந்தியாவில் 2023 ODI உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இறுதி செய்துள்ளது. ICC நிர்ணயித்த விதிகளின்படி, ODI உலகக் கோப்பை 2023 இல் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் தங்கள் … Read more

இலங்கையில் தொடர் மழை! ஆசிய கோப்பையில் ஏற்படப்போகும் மாற்றம்!

ஆசிய கோப்பை 2023: இலங்கை தலைநகரில் கனமழை பெய்து வருவதால் 6 சூப்பர்-4 போட்டிகளில் ஐந்து போட்டிகள் கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு மாற்றப்படலாம் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அசல் அட்டவணையின்படி, ஆறு சூப்பர்-4 போட்டிகளில் ஐந்து போட்டிகளை கொழும்பு நடத்த உள்ளது, அதே நேரத்தில் ஒரு போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது.  எவ்வாறாயினும், கொழும்பில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருவதுடன், அடுத்த சில … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நேபாளம்

பல்லகெலெ, ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி…!!

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மற்றும் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் லாட்விய நாட்டை சேர்ந்த ஜெலினா ஓஸ்டபென்கோ உடன் மோதினார். இதில் முதல் செட்டை கைப்பற்றிய ஸ்வியாடெக் அடுத்த இரு செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 1 மணி நேரம் 48 நிமிடங்கள் நடந்த … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நேபாளம் ஆட்டம் மழைக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்

பல்லகெலெ, ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் … Read more