அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஓய்வு அறிவிப்பு

மும்பை, இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (வயது 42) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இவர் இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன அவர் திறமையான சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்டார். 42 … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் ஜானிக் சினெர் அரையிறுதிக்கு தகுதி

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர், சக நாட்டவரான லோரென்சோ முசெட்டி உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சினெர் 6-1, 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். … Read more

ஓய்வு இல்லை…அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் தோனி

சென்னை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக இந்த சீசனின் தொடக்க கட்டத்தில் … Read more

ஓய்வை அறிவித்த இந்திய அணியின் மூத்த வீரர் – 25 வருட பயணம் முடிவுக்கு வந்தது!

Amit Mishra Retirement: கடந்த 25 ஆண்டு காலமாக உள்ளூர் போட்டிகள் தொடங்கி, சர்வதேச போட்டிகள் வரை தனது அற்புதமான லெக் ஸ்பின் பந்துவீச்சால் தனி முத்திரை பதித்தவர் அமித் மிஷ்ரா. 42 வயதான அவர் இன்றுதான் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். Add Zee News as a Preferred Source Amit Mishra: 2003இல் அறிமுகம் ஹரியானா வீரரான அமித் மிஷ்ரா 2000ஆம் ஆண்டில் உள்ளூர் கிரிக்கெட்டில்  தடம் … Read more

இனி சேப்பாக்கில் தோனியை பார்ப்பதே கஷ்டம் போல… ஜிஎஸ்டியால் எக்குத்தப்பாக உயரும் டிக்கெட் விலை!

IPL Ticket Price Hike: ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. தற்போது ஜிஎஸ்டியை பொருத்தவரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய வரி அடுக்குகள் உள்ளன. இதில், 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Add Zee News as a Preferred Source 40% வரி எதற்கெல்லாம்?  அதேநேரத்தில், ஒகு சில சரக்கு மற்றும் சேவைகளுக்கு … Read more

Yo-Yo டெஸ்டில் விராட் கோலி தான் ஜித்து… அவரையே மிஞ்சிய இந்த 4 வீரர்கள்!

India National Cricket Team: இந்திய கிரிக்கெட்டில் ஒரு காலகட்டம் வரை வீரர்களின் ஃபிட்னஸ் என்பது பெரியளவில் கவனம் பெறாது. முன்னணி வீரர்கள் பலரும் உடற்தகுதியின்றியும் பல ஆண்டுகள் நீடித்து வருவதை கடந்த தலைமுறை கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்.  Add Zee News as a Preferred Source Team India: இந்திய அணியில் Yo-Yo Test பேட்டிங்கில் கில்லியாக இருப்பார்கள், ஆனால் பீல்டிங்கில் கடுமையாக சொதப்புவார்கள். பேட்டிங்கில் 40 ரன்களை அடிக்கிறார்கள் என்றால் அதில் 10-15 … Read more

3வது டி20 போட்டி; வங்காளதேச அணிக்கு எதிராக நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு

சில்ஹெட், நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று வங்காளதேசம் அணி தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேசம் அணி முதலில் … Read more

முன்னாள் உலக சாம்பியனுக்கு இந்த நிலைமையா…. தரவரிசையில் 8வது இடத்தில் இங்கிலாந்து

துபாய், ஒருநாள் போட்டிகளின் அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . இதில் இங்கிலாந்து அணி 8வது இடத்துக்கு சரிந்துள்ளது இந்தாண்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்று மோசமான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தி இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8வது இடத்துக்கு சரிந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 8வது இடத்தில் உள்ளதால் அந்த அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் … Read more

முதல் டி20: ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

ஹராரே, இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் … Read more

இந்த பதக்கம் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும்: சிராக் ஷெட்டி நெகிழ்ச்சி

பாரீஸ், சமீபத்தில் பாரீசில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. உலக பேட்மிண்டனில் 2-வது முறையாக பதக்கத்தை ருசித்த சிராக் ஷெட்டி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூ யிக் இணையை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தோம். அவர்களுக்கு எதிரான வெற்றி எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஏனெனில் இதே மைதானத்தில் தான் … Read more