இந்திய அணியுடன் பயணிக்காத விராட் கோலி – அதிருப்தி காரணமா?

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது. ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலி அதிருப்தி … Read more

MLC 2023: முதல் சாம்பியன் பட்டத்தை தூக்கிய MI… இறுதிப்போட்டியில் பூரனின் சரவெடி சதம்!

Nicholos Pooran MLC 2023: டி20 கிரிக்கெட் உலகளவில் பிரபலமாகி வரும் நிலையிலும், அதிக வருவாயை பெற்றுத் தருவதை அடுத்தும் டி20 தொடர்கள் பல நாடுகளில் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் தற்போது கொடிகட்டி பறக்கும் டி20 தொடராகும். அந்த அளவிற்கு அந்த தொடரில் வருவாய் குவிக்கப்படுகிறது.  ஐபிஎல் தொடரை போலவே பல்வேறு டி20 தொடர்கள் நடைபெறும் நிலையில், அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடரின் முதல் சீசன் … Read more

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது கொலம்பியா

சிட்னி, பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘எச்’ பிரிவில் சிட்னியில் நேற்று அரங்கேறிய ஒரு ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான ஜெர்மனி, கொலம்பியாவை எதிர்கொண்டது. இதில் பந்து பெரும்பாலான நேரம் ஜெர்மனி வசமே (68 சதவீதம்) சுற்றி வந்தது. அதிகமான ஷாட்டுகளையும் இவர்கள் தான் உதைத்தனர். ஆனால் அதிர்ஷ்டக்காற்று கொலம்பியா பக்கம் வீசியது. … Read more

ஸ்பெயின் ஆக்கி தொடர்: கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணி

பார்சிலோனா, ஸ்பெயின் ஆக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து பெண்கள் அணிகள் பங்கேற்ற ஆக்கித் தொடர் அங்குள்ள பார்சிலோனா நகரில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. இந்திய அணி நேற்று நடந்த கடைசி லீக்கில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அமர்க்களப்படுத்தியது. வந்தனா கட்டாரியா (22-வது நிமிடம்), மோனிகா (48-வது நிமிடம்), உதிதா (58-வது நிமிடம்) ஆகியோர் இந்திய … Read more

3வது ஒருநாள் போட்டியிலும் ரோஹித், கோலி இல்லையா? டிராவிட் சொன்ன பதில்!

ஞாயிற்றுக்கிழமை பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் கீசி கார்டியின் ஆட்டமிழக்காமல் 36.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. ஹோப் ஆட்டமிழக்காமல் 80 பந்துகளில் 63 ரன்களும், கார்டி 65 … Read more

ஸ்பெயின் ஆக்கி தொடர்: இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்

பார்சிலோனா, ஸ்பெயின் ஆக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய 4 நாடுகள் கலந்து கொண்ட ஆண்கள் ஆக்கித் தொடர் ஸ்பெயினின் தெரசா நகரில் நடந்தது. இதில் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட இந்தியா 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் நேற்று நெதர்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், தில்பிரீத் சிங் கோல் போட்டனர். இந்திய ஆண்கள் அணி … Read more

'வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டம்; யாராவது ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை பேட் செய்திருக்க வேண்டும்' – டிராவிட் கருத்து

பிரிட்ஜ்டவுன், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 40.5 ஓவர்களில் 181 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் … Read more

பார்முலா1 கார்பந்தயத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பென்

ஸ்பா, இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12-வது சுற்றான பெல்ஜியம் கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 308.052 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்னல் வேகத்தில் பாய்ந்தனர். நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) ஒரு மணி 22 நிமிடம் 30.450 வினாடிகளில் முதலாவதாக வந்து 25 புள்ளிகளை கைப்பற்றினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அவர் … Read more

’ரியல் ஜாம்பவான்’ ஸ்டூவர்ட் பிராட் ஓய்வுக்கு யுவராஜ் சிங்கின் ரியாக்ஷன்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஓவலில் நடைபெற்று வரும் ஆஷஷ் தொடரின் கடைசி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார். 17 ஆண்டு காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அவரின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும், ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. அவர் ஓய்வு முடிவை அறிவித்தவுடன் உலக கிரிக்கெட் ரசிகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் … Read more

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – சூர்யகுமார் யாதவுக்கு டிராவிட் எச்சரிக்கை

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பிறகு ஒருநாள் தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றும், 2வது போட்டியில் தோல்வியும் தழுவியது. மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் … Read more