ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க மலேசியா ஆக்கி அணி சென்னை வருகை

சென்னை, ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அரங்கேறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை … Read more

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 389/9

லண்டன், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னில் ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 103.1 ஓவர்களில் 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க … Read more

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்கு

பிரிட்ஜ்டவுன், வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா , விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார். இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. பின்னர் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

கிரிக்கெட் ‘நாட்டாமை’ இந்திய அம்பயர் நிதின் மேனனின் துணிச்சலான, சரியான முடிவுக்கு குவியும் பாராட்டு

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது அழுத்தத்திற்கு அடிபணியாமல துணிச்சலான முடிவை எடுத்த இந்திய அம்பயர் நிதின் மேனனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் அம்பயர் நிதின் மேனன் எடுத்த முடிவு இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், அவருக்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்க இங்கிலாந்து வீரர்கள் முதல் டெஸ்டின் போது … Read more

பென் ஸ்டோக்ஸ் செய்த மகத்தான சாதனை! இந்த மைல்கல்லை எட்டிய 3வது வீரர்!

லண்டனில் உள்ள ஓவலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் ஐந்தாவது ஆஷஸ் 2023 டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, ​​இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) முக்கிய சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். 32 வயதான பென் ஸ்டோக்ஸ், ரெட்-பால் கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான அவர், மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் ஆகியோருக்குப் பிறகு … Read more

சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி

ஐபிஎல் போட்டியைப்போலவே அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் மோதின. இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் சீட்டில் ஆர்கஸ் அணியை எதிர்கொள்ளும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பரபரப்பான இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் … Read more

முகமது அமீர் வீசிய ஓவரை தாறுமாறாக அடித்து விளாசிய யூசுப் பதான் – 26 பந்துகளில் 86 ரன்கள் குவிப்பு

ஜிம்பாப்வேயில் 10 ஓவர் கொண்ட கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. ஜூலை 20ஆம் தேதி துவங்கிய அந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை படித்த டர்பன் குவாலண்டர்ஸ் மற்றும் ஜோகனஸ்பர்க் பஃபலோஸ் ஆகிய அணிகள் குவாலிபயர் 1 போட்டியில் மோதின. ஹராரேயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டர்பன் அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அயர்லாந்து வீராங்கனை

டப்ளின், அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான மேரி வால்ட்ரான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்து உள்ளார். 39 வயது நிரம்பிய அவர் அயர்லாந்து பெண்கள் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான வால்ட்ரான் 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்று ஓய்வு அறிவித்து உள்ளார். அயர்லாந்து அணிக்காக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 481 ரன்களும், 88 டி20 போட்டிகளில் … Read more

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

டோக்கியோ, ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் , டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சன் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அக்சல்சன் 19-21, 21-18, 21-8 செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதனால் இந்திய வீரர் பிரனாய், தொடரில் இருந்து வெளியேறினார் தினத்தந்தி Related Tags : பேட்மிண்டன் 

இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்பதை 'இந்தியன்' என மாற்றிய வீரர்

டெல்லி, இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். இவர் பந்தை ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவர். இவரது ‘ஸ்விங்’பந்துவீச்சுக்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தவர் புவனேஷ்வர் குமார். டி20 போட்டிகளில் விக்கெட் பெரிய அளவில் கைப்பற்றாவிட்டாலும் சிக்கனமாக பந்து வீசக்கூடியவர். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. காயம் சரியான பின்பும் அணியில் … Read more