வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – சூர்யகுமார் யாதவுக்கு டிராவிட் எச்சரிக்கை

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பிறகு ஒருநாள் தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றும், 2வது போட்டியில் தோல்வியும் தழுவியது. மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் … Read more

இலங்கை தடகள தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வாகை சூடும் இந்தியர்கள்

நியூடெல்லி: இலங்கை தடகள தேசிய சாம்பியன்ஷிப் 2023 இன் இரண்டாவது நாளான சனிக்கிழமையன்று நடைபெற்ற போட்டிகளில், இந்திய தடகள வீரர்கள் மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி உட்பட  நான்கு பதக்கங்களை வென்றனர். பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் பிரித்தி தங்கப் பதக்கத்தை வென்றார், ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதிப் போட்டியில் பால் கிஷன் வெற்றி பெற்றார். முன்னதாக, பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் சோனியா பைஷ்யா தங்கப் பதக்கம் வென்றார். இதே … Read more

மேஜர் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்.ஐ.நியூயார்க் அணி

டல்லாஸ், 6 அணிகள் இடையிலான முதலாவது மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) 20 ஓவர் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்-எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த நியூயார்க் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 158 ரன்னில் ஆல்-அவுட் … Read more

ஓய்வை அறிவித்த இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஓவலில் நடந்த இறுதி ஆஷஸ் டெஸ்டின் 3வது நாள் முடிவில் பிராட் தனது 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  நாளை அல்லது திங்கட்கிழமை எனது கிரிக்கெட்டின் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று பிராட் கூறினார். “இது ஒரு அற்புதமான பயணம், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜை நான் எவ்வளவு விலைக்கு அணிந்திருக்கிறேன் என்பது ஒரு பெரிய பாக்கியம்.  நான் எப்பொழுதும் முதலிடத்தில் முடிக்க விரும்பினேன், இந்தத் தொடர் நான் ஒரு பகுதியாக … Read more

உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்

செங்டு, 31-வது உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள செங்டு நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 119 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 2-வது நாளான நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இந்திய பல்கலைக்கழக வீராங்கனை மானு பாகெர் 239.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை இளவேனில் (252.5 புள்ளிகள்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். … Read more

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க மலேசியா ஆக்கி அணி சென்னை வருகை

சென்னை, ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அரங்கேறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை … Read more

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 389/9

லண்டன், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னில் ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 103.1 ஓவர்களில் 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க … Read more

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்கு

பிரிட்ஜ்டவுன், வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா , விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார். இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. பின்னர் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

கிரிக்கெட் ‘நாட்டாமை’ இந்திய அம்பயர் நிதின் மேனனின் துணிச்சலான, சரியான முடிவுக்கு குவியும் பாராட்டு

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது அழுத்தத்திற்கு அடிபணியாமல துணிச்சலான முடிவை எடுத்த இந்திய அம்பயர் நிதின் மேனனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் அம்பயர் நிதின் மேனன் எடுத்த முடிவு இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், அவருக்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்க இங்கிலாந்து வீரர்கள் முதல் டெஸ்டின் போது … Read more

பென் ஸ்டோக்ஸ் செய்த மகத்தான சாதனை! இந்த மைல்கல்லை எட்டிய 3வது வீரர்!

லண்டனில் உள்ள ஓவலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் ஐந்தாவது ஆஷஸ் 2023 டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, ​​இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) முக்கிய சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். 32 வயதான பென் ஸ்டோக்ஸ், ரெட்-பால் கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான அவர், மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் ஆகியோருக்குப் பிறகு … Read more