சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்! தோனி எடுத்த முடிவு!

சமீபத்திய ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றது, மகேந்திர சிங் தோனி மீண்டும் தனது ஓய்வு பற்றிய வதந்திகளை நிராகரித்தார், இந்தியன் பிரீமியர் லீக்கின் அடுத்த பதிப்பில் மீண்டும் சிஎஸ்கேயை வெற்றிபெறத் தயார்படுத்துவதாகக் கூறினார்.  எம்எஸ் தோனி மற்றொரு ஐபிஎல் சீசனில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 42 வயதானஅவர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு எம்எஸ் தோனியின் ஓய்வுக்கான சாத்தியம் குறித்து பேசினார், மேலும் அணியின் அடுத்த கேப்டனுக்கான … Read more

ரோஹித் சர்மா பெரும் சாதனை… கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்ததில்லை!

WI vs IND, Rohit Sharma: மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளை விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மீதும் எதிர்பார்ப்பு கிளம்பியது.  இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்றது. முதலில் … Read more

இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி : இந்திய அணிக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க … Read more

ஒருநாள் உலக கோப்பையில் ரோஹித் இல்லையா? வெளியான பகீர் தகவல்!

ஐசிசி உலகக் கோப்பை 2023 இந்த ஆண்டு நடைபெறும் ஒரு பிரமாண்டமான கிரிக்கெட் நிகழ்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான களத்தில் மொத்தம் 10 அணிகள் உள்ளன.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன. 2023 ஐசிசி உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக ரோஹித் ஷர்மா உள்ளார், மேலும் அவர் போட்டியில் அணியை வழிநடத்த அதிக வாய்ப்புள்ளது. … Read more

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பாகிஸ்தானையும், அரையிறுதியில் வங்காளதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முகமது ஹாரிஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகத்தை … Read more

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த இலங்கை அணி வீரர்

கொழும்பு, இலங்கை அணியின் தொடக்க வீரரான லஹிரு திரிமான்னே (வயது 33) தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். திரிமான்னே 44 டெஸ்ட்களில் 2088 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் 3194 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 291 ரன்களும் குவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான திரிமான்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் … Read more

கிரிக்கெட் களத்தில் மிகப்பெரிய சண்டைகள்! சூப்பர் ஃபைட்ஸ் சாம்பியன் பட்டம் யாருக்கு?

கிரிக்கெட் விளையாட்டு, உலக அளவில் அனைவரின் மனம் கவர்ந்த விளையாட்டுகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. ஆனால் அது எப்போதும் மென்மையான விளையாட்டாக இருந்ததில்லை. கிரிக்கெட் ஆடுகளத்தில் வீரர்கள் சிரிப்பதையும் வேடிக்கையாக இருப்பதையும் நாம் பார்ப்பதைப் போன்றே, வீரர்களின் கோபம் வெடித்து, அவர்கள் தகாத முறையில் நடந்துகொள்வதையும் பார்த்துள்ளோம். வேறு விதமாகச் சொன்னால், கிரிக்கெட் வீரர்களும் இயல்பான மனிதர்கள் தானே? அவர்கள், தங்கள் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவது போன்ற சில சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் … Read more

கொரிய ஓபன் பேட்மிண்டன்; இந்திய இணை சாம்பியன்

யோசு , கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரட்டையர் பேட்மிண்டன் தரவரிசையில் 3-வது இடத்தில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ள இந்தோனேஷிய இணை உடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் … Read more

இந்திய அணிக்காக ஏழு ஆண்டுகள் ஆடியும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வாய்ப்பு கிடைகாத வீரர்

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 33வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 7 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக பல போட்டிகளில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை ஒரே ஒரு தீராத குறை இருந்து கொண்டிருக்கிறது. அதுஎன்னவென்றால் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட வேண்டும் என்பது தான். ஆனால் இதுவரை அந்த கனவு … Read more

வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு

போலந்து, போலந்து நாட்டில் வார்சா ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் அதில் பங்கேற்பதற்காக சென்ற 38 வயதான ரஷிய டென்னிஸ் வீராங்கனை வேரா ஸ்வோனரேவாவை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். நாட்டின் பாதுகாப்பு கருதி ரஷியர்கள் போலந்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளனர். இது குறித்து போலந்து நாட்டின் சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகம் கூறியதாவது, ‘ரஷியா மற்றும் … Read more