ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்

பாங்காக், 24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா பதக்க கணக்கை தொடங்கியுள்ளது. ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் 29 நிமிடம் 33.26 வினாடிகளில் இலக்கை கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஜப்பானின் ரென் தஜவா (29 நிமிடம் 18.44 வினாடி) தங்கப்பதக்கமும், கஜகஸ்தானின் கோச் கிமுடாய் ஷட்ராக் வெள்ளிப்பதக்கமும் (29 நிமிடம் … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது – அருண் துமால் தகவல்

புதுடெல்லி, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் மாற்று ஏற்பாடாக 4 லீக் ஆட்டங்களை பாகிஸ்தானிலும், இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்களை பொதுவான இடத்திலும் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய யோசனையை முன் வைத்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு இதற்கு ஒப்புதல் அளித்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 4 லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட எஞ்சிய 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறும் என்று அறிவித்தது. 6 … Read more

IND vs WI: முதல் நாளிலேயே சாதனைகளை அள்ளிய அஸ்வின்… என்னென்ன தெரியுமா?

West Indies vs India, Ravichandran Ashwin: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று (ஜூலை 12) சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பட்டையை கிளப்பி, ஆட்டத்தையே தன்வசமாக்கினார். வழக்கமாக தனது வித்தியாசமான பந்துவீச்சால் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பேட்டர்களை ரன் எடுக்க தடுமாற வைத்தார்.  3ஆவது இந்திய பவுலர்! அதுமட்டுமின்றி, அஸ்வின் நேற்றைய ஆட்டத்தில் பல சாதனைகளையும் படைத்தார். முதல் நாள் இரண்டாவது செஷனில் அல்சாரி … Read more

'எனது ஓய்வு காலம் வெகுதொலைவில் இல்லை' – மெஸ்சி சொல்கிறார்

பியூனஸ் அயர்ஸ், கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த லயோனல் மெஸ்சி கடந்த ஜூன் மாதம் பிரான்சின் பி.எஸ்.ஜி. கிளப்பில் இருந்து விலகி அமெரிக்காவை சேர்ந்த இண்டர் மியாமி கிளப்பில் இணைந்தார். மேஜர் லீக் போட்டியில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ள 36 வயது மெஸ்சி அர்ஜென்டினா டெலிவிஷனுக்கு … Read more

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி சிறப்பான தொடக்கம்

டொமினிகா, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியினர் வெற்றியோடு … Read more

அணித் தேர்வில் அரசியல் தலையீடு…? – ராகுல் டிராவிட் சொல்வது இதுதான்!

இந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது,”விமர்சகர்கள் எப்போதுமே கேள்விகளை எழுப்புவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள், ஒரு பயிற்சியாளரின் பணி நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உள்ளது.  குறிப்பாக, வீரர்களை தேர்வு செய்யும்போது, அது பிளேயிங் லெவன் அல்லது ஒட்டுமொத்த ஸ்குவாடாக இருந்தாலும், பயிற்சியாளர் அடிக்கடி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். வீரர்களுக்கு நான் செய்யும் பெரும் உதவி என்னவென்றால், அவர்களிடம் நேர்மையாக இருந்து அவர்களுக்கான வாய்ப்பை எவ்வித அரசியல் தலையீடும், பாராபட்சமின்றி … Read more

India vs West Indies: முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல்!

India vs West Indies: கரீபியனில் நடைபெறும் தொடரின் முதல் டெஸ்டில் இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன, இரண்டு அணியும் கடந்த மாதங்களில் ஏற்பட்ட தோல்விகளிலும், ஏமாற்றங்களிலிருந்து மீண்டு வர விரும்புகின்றன. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியைத் தொடங்க இரு அணிகளும் நேர்மறையான முடிவுகளைத் தேடும் அதே வேளையில், அடுத்த 5 நாட்கள் வானிலை எப்படி இருக்கும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. டொமினிகாவில் உள்ள ரோசோவில் மழை வரும் அளவிற்கு காற்றில் ஈரப்பதம் … Read more

பேட்மிண்டன் புதிய தரவரிசை – பி.வி. சிந்து , லக்ஷயா சென் முன்னேற்றம்

பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 7 இடங்கள் உயர்ந்து 12-வது இடத்தை பிடித்துள்ளார். கனடா ஓபனை வென்றதன் மூலம் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. மற்றொரு இந்திய வீரர் பிரனாய் 9-வது இடம் வகிக்கிறார். ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) முதலிடத்தில் நீடிக்கிறார். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார் தினத்தந்தி … Read more

IND vs WI: என்னுடன் இவர் தான் ஓப்பனிங்கில் இறங்குவார் – ஓப்பனாக சொன்ன ரோஹித் சர்மா

India vs West Indies 1st Test: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25 சுற்றில், இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை இன்று முதல் விளையாட உள்ளது. 2021 மற்றும் 2023 ஆகிய இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் முறையே நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் மண்ணைக்கவ்வி இந்தியா தோல்வியடைந்தது. இருப்பினும், டெஸ்டில் அதன் ஆதிக்கத்தை தொடர்ந்து, கோப்பையை நோக்கிய பயணத்தில் முதல் அடியில் இந்தியா இன்று கால் வைக்கிறது.  மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு? கோவை- நெல்லை அணிகள் இன்று பலப்பரீட்சை

நெல்லை, டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லையில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8 அணிகள் இடையிலான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கியது. கோவை, சேலம், நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய இடங்களில் நடந்த லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை … Read more