விம்பிள்டன் டென்னிஸ் தரவரிசை பட்டியல் – அல்காரஸ், ஸ்வியாடெக் முதலிடம்

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் வருகிற 3-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் போட்டிக்குரிய தரநிலை 32 வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். இதன்படி ஆண்கள் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரசுக்கு போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலக சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 2-வது இடமும், டேனில் மெட்விடேவ் (ரஷியா) 3-வது இடமும், கேஸ்பர் ரூட் (நார்வே) 4-வது இடமும், சிட்சிபாஸ் (கிரீஸ்) 5-வது இடமும் … Read more

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தரவரிசை: நம்பர் 1 கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்விடெக்

விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டி திங்கள்கிழமை தொடங்க உள்ளது. கார்லோஸ் அல்கராஸ் ஆடவர் பிரிவில் நம்பர் 1 வீரராக களமிறங்குவார். இகா ஸ்விடெக் பெண்கள் நம்பர் 1 வீராங்கனையாக களம் இறங்குகிறார். விம்பிள்டன் தரவரிசைப் பட்டியல் நேற்று (2023, ஜூன் 28) அறிவிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, “குயின்ஸ் கிளப்பில் தனது முதல் புல் கோர்ட் பட்டத்தை வென்ற பிறகு திங்களன்று நம்பர்.1 தரவரிசைக்குத் … Read more

ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில் தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில், 2 தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், 25 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட, சென்னை நங்கநல்லூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஆதர்ஷ், 90 கிலோ எடைப்பிரிவு போட்டியில் 2 தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளார். இந்த … Read more

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரபூர்வ முழு அட்டவணை

மும்பை, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆமதாபாத்தில் அக்டோபர் 5-ந்தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் 10 அணிகள் பங்கேற்கும் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா … Read more

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி;பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள் முழு விவரம்…!!

இங்கிலாந்து, ஆண்டுதோறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெறும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படும் முன்னணி வீரர்கள், வீராங்கனைகளின் பட்டியலைப் பார்ப்போம். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனிலும், இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்ற போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்,ஆஸ்திரேலிய ஓபனில் இம்முறை சாம்பியன் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை சபலென்கா உள்ளிட்டோர் இப்போட்டியில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. இகா ஸ்வியாடெக் உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் … Read more

'உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதக்கூடும்' – சேவாக் கணிப்பு

மும்பை, ஐ.சி.சி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் பேசுகையில், ‘இந்தியாவில் நடைபெறும் போட்டியில் ஆசிய அணிகள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறமுடியாது. தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா வீரர்கள் அதிக எண்ணிக்கையில் விளையாடுகிறார்கள். எனவே அவர்களும் இங்கு சிறப்பாக விளையாட வாய்ப்பு உள்ளது. இந்திய வீரர்கள் பிறந்தது முதல் இங்கு விளையாடுவதால் அவர்களுக்கு மைதானங்களை பற்றி நன்றாக தெரிந்து இருக்கும். 2011-ம் ஆண்டு உலகக் … Read more

ODI 2023: இவர்களில் யார் கோப்பையை கைப்பற்றுவார்? மகுடம் சூடப்போகும் அணித்தலைவர்

2023 ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி அறிவிக்கப்பட்டது. போட்டி தொடங்க 100 நாட்கள் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்ட நிலையில்,அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 2023 அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் போட்டி, நவம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடையும். 46 நாட்களுக்குள் நடைபெறும் மெகா நிகழ்வுக்கான அட்டவணையில் மொத்தம் 10 மைதானங்களில் நடைபெறும் போட்டியில், இறுதியில் வெற்றி பெறுவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்விக்கான பதில், பத்தில் … Read more

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி இன்று தொடக்கம்

லண்டன், இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தொடக்க டெஸ்டில் அதிரடியாக விளையாடி முதல் நாளிலேயே டிக்ளேர் செய்து ஆச்சரியப்படுத்திய இங்கிலாந்து அணி … Read more

விராட் கோலியிடம் கோபத்தை காட்டிய தோனி… அதுவும் அவர் மொறைச்சா அவ்வளவு தான்!

MS Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ‘கேப்டன் கூல்’ என்று அனைவராலும் போற்றப்படுபவர். ஏனெனில் அவர் ஆட்டத்தின்போது, அவர் பெரியளவில் கோபத்தை வெளிப்படுத்த மாட்டார் மற்றும் வீரர்களிடம் கோபப்படாமல் இருப்பார்.  ஆனால் தோனி களத்தில் வீரர்களிடம் கோபப்படுவார் என்றும், அவர் கோபமாக இருக்கிறார் என்பதை வீரர்கள் மீதான அவரின் முறைப்பான பார்வையே வெளிப்படுத்திவிடும் என்றும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். ஒருமுறை விராட் கோலி மீதும் தோனி கோபப்பட்டதாகவும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். ஒரு யூ-ட்யூப் … Read more

புறகணிக்கப்பட்ட முக்கிய மைதானங்கள்… உலகக்கோப்பையை ஆட்டிப்படைக்கும் அரசியல் என்ன?

ICC World Cup 2023: 2023 ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அட்டவணையை அறிவித்தது ஐசிசி நேற்று அறிவித்தது. போட்டி தொடங்க இன்னும் 100 நாட்கள் உள்ளன. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி போட்டியின் தொடக்க ஆட்டமும், நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா முறையே நவம்பர் 15,16 ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டியை நடத்துகின்றன. மிகப்பெரிய தொடர் … Read more