முதல் முறையாக உலகக்கோப்பைக்கு தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ்… அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

West Indies Out Of World Cup 2023: ஜிம்பாப்வேயில் நடந்து வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்த மேற்கு இந்திய தீவுகள், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறிவிட்டது.   தற்போது நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு குரூப்பில் முதல் இடத்தை பிடிப்பவர்கள் தான் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறுவார்கள். அந்த வகையில், தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இடத்திற்கு இனி … Read more

உலகக்கோப்பை தகுதிச்சுற்று; ஸ்காட்லாந்து அபார பந்து வீச்சு…வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்னுக்கு ஆல் அவுட்…!

ஹராரே, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பஒ தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த சூப்பர் 6 தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் ஆடி வருகின்றன. … Read more

நான் இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு அட்டகாசமாக விளையாடிய அவர் மீது இந்த ஐபிஎல் போட்டியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையிலும் அவருக்கு இடம் கிடைத்தாலும், வயது மற்றும் இப்போதைய பார்ம் காரணமாக இனி இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கை இழக்காத தினேஷ் கார்த்திக், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் … Read more

உலக கோப்பை மைதானங்களை ஆய்வு செய்ய பாகிஸ்தான் பாதுகாப்பு குழு இந்தியா வர உள்ளதாக தகவல்

லாகூர், அகமதாபாத், இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. அந்த எட்டு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். அந்த எட்டு அணிகளை தவிர்த்து எஞ்சிய இரு இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதிச்சுற்று போட்டிகள் … Read more

இந்தியா வல்லரசாக இருந்தால், பாகிஸ்தானும் சளைத்ததில்லை! சீறும் இம்ரான் கான்

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடரில் பிசிசிஐ மற்றும் பிசிபி பங்கேற்கும் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பைக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்ததால் பிசிசிஐயும் பிசிபியும் நேருக்கு நேர் மோதின. பல பரபரப்புகளுக்குப் பிறகு, இரு வாரியங்களும் ஆசிய கோப்பை 2023இல், கலப்பின மாதிரியில் விளையாட ஒப்புக்கொண்டன, அங்கு முதல் நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் விளையாடப்படும், கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது … Read more

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி…11 ஓவர்கள் பந்து வீசிய நியூசிலாந்து வீராங்கனை – காரணம் என்ன..?

காலே, நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பெண்கள் கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 329 ரன்கள் … Read more

ஹர்திக் பாண்டியா கேப்டனான பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத இளம் வீரர்

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக நீண்ட காலம் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. பின்னர் அணிக்கு திரும்பிய அவர், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் முத்திரை பதித்தார். அதனால் அவருக்கு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பும் தேடி வந்தது. அந்த பொறுப்பை பாண்டியா ஏற்றது முதல் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரால் இந்திய அணியில் விளையாடவே முடியவில்லை.  அவர் யார் என்றால் வெங்கடேஷ் ஐயர் தான். ஹர்திக் … Read more

டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் பந்துவீச்சு தேர்வு

நெல்லை, 8 அணிகள் இடையிலான 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது . அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 5 … Read more

தேர்வுக்குழு தலைவராகவும் முன்னாள் இந்திய வீரர்… இனியாவது விடிவுகாலம் பிறக்குமா?

Agit Agarkkar: இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தனது ஆண்டு சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து கணிசமாக உயர்த்த பிசிசிஐ ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கான தேர்வுக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  Zee News நடத்திய ஸ்டிங் ஆபரேஷனைத் தொடர்ந்து தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி முதல் அந்த பதவி காலியாக உள்ளது. சிவசுந்தர் தாஸ் தற்போது இடைக்கால … Read more

முதல் ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார் ஷாஹீன் அப்ரிடி

லண்டன் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் இங்கிலாந்திலும் விடாலிட்டி பிளாஸ்ட் 20 ஓவர் தொடர் நடந்து வருகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணியின் கேப்டன் அலெக்ஸ் டேவிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் 20 … Read more