தேர்வுக்குழு தலைவராகவும் முன்னாள் இந்திய வீரர்… இனியாவது விடிவுகாலம் பிறக்குமா?

Agit Agarkkar: இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தனது ஆண்டு சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து கணிசமாக உயர்த்த பிசிசிஐ ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கான தேர்வுக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  Zee News நடத்திய ஸ்டிங் ஆபரேஷனைத் தொடர்ந்து தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி முதல் அந்த பதவி காலியாக உள்ளது. சிவசுந்தர் தாஸ் தற்போது இடைக்கால … Read more

முதல் ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார் ஷாஹீன் அப்ரிடி

லண்டன் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் இங்கிலாந்திலும் விடாலிட்டி பிளாஸ்ட் 20 ஓவர் தொடர் நடந்து வருகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணியின் கேப்டன் அலெக்ஸ் டேவிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் 20 … Read more

ஒரே ஓவரில் 4 விக்கெட்! புதிய உலக சாதனை படைத்த ஷாஹீன் அஃப்ரிடி!

பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி வெள்ளிக்கிழமை டி20 ப்ளாஸ்டில் நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக விளையாடியபோது, ​​அவரது அற்புதமான பந்துவீச்சினால் ஆட்டத்தை மாற்றி ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் திகைக்க வைத்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே அஃப்ரிடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதன் மூலம் டி20 போட்டியின் தொடக்க ஓவரில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார். இந்த ஆண்டு டி20 பிளாஸ்டில் அஃப்ரிடி நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக சிறந்த ஃபார்மில் இருந்தார்; அவர் இதுவரை 13 போட்டிகளில் … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் தொடரும் பதக்க வேட்டை! டயமண்ட் லீக் சாம்பியன் கோல்டன் பாய்

மதிப்புமிக்க டயமண்ட் லீக் தொடரின் லொசேன் லெக் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில், 87.66 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெற்றி பெற்று பட்டம் வென்றார். லாசானேயில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டிகலில், இரண்டாவது முறையாக பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா! காயம் காரணமாக ஒரு மாத ஓய்வில் இருந்தாலும், திரும்பி வந்த உடனே நீரஜ் சோப்ரா பட்டம் வென்று சாதனை படைத்தார் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ராவின்அபாரமான ஆட்டம் தொடர்கிறது. ஒரு மாத … Read more

யார் கண்ணு பட்டுச்சோ… 100ஆவது போட்டியில் பலத்த காயம் – வலியில் துடித்த ஆஸி., வீரர்!

Nathan Lyon Injury: ஆஷஸ் சுற்றுப்பயணத்தில் நாதன் லியான் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று கையில் ஊன்றுகோலுடன் வந்தது ரசிகர்களை கவலையடைய செய்தது. நாதன் லயான் காலில் சதை பிடிப்பால் பாதிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாளான நேற்று (ஜூலை 29), பீல்டிங் செய்யும் போது எல்லைக்கு வெளியே ஓடியதால், நாதன் லயான் காயமடைந்தார். … Read more

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர்;இந்திய அணி சாம்பியன்…..!!

பூசன், தென் கொரியாவின் பூசன் நகரில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 தொடர் நடைபெற்று வந்தது. இதில், இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.இந்த தொடரின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று அரங்கேறியது. இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஈரான் மற்றும் முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை விழ்த்தி தங்க … Read more

ஆசிய கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு இந்த படை தான் தேவை… உத்தேச அணி ஒரு பார்வை!

Asia Cup 2023: ஆசிய கோப்பைக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், போட்டியின் அமைப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. கடந்தாண்டு ஆசிய கோப்பை டி20 வடிவில் நடத்தப்பட்ட நிலையில், இம்முறை ஒருநாள் போட்டி வடிவில் நடத்தப்படுகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.  கடைசியாக 2018இல் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, இந்த முறையும் கோப்பையை வெல்ல ஆர்வமாக உள்ளது. ஆனால், குறிப்பிட்ட வீரர்கள் கிடைப்பதில் பெரிய கேள்விக்குறிகள் எஞ்சியிருப்பதால், ரோஹித் சர்மா தலைமையிலான … Read more

'துணை கேப்டன் பதவிக்கு ஜடேஜா தகுதியானவர்' – முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- “வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அஜிங்யா ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதை பின்னோக்கிய ஒரு முடிவு என்று சொல்லமாட்டேன். ஆனால் 18 மாதங்கள் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் டெஸ்ட் அணிக்கு திரும்பிய உடனே அவருக்கு துணை கேப்டன் பதவி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதைத் … Read more

தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்;லீக் ஆட்டங்களில் கர்நாடகா,மத்தியப் பிரதேசம்-பஞ்சாப் அணிகள் வெற்றி….!!

ஒடிசா, 13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மொத்தம் 28 அணிகள் இடம் பெற்றுள்ளன.அவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த 3-வது நாள் லீக் ஆட்டங்களில் கர்நாடகா,மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றிகளை பதிவு செய்தன. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் லு புதுச்சேரி அணிகள் மோதின.இந்த … Read more

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி – சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை சென்னையில் 17 இடங்களில் நடைபெறுகிறது. இதில் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, பளுதூக்குதல், செஸ், கால்பந்து, தடகளம் ஆகிய போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டி அசோக் நகர், மெரினா கடற்கரை, குருநானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, போரூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆகிய இடங்களிலும், பேட்மிண்டன், சிலம்பம், டேபிள் … Read more