Ashes 2023: சின்னப்பிள்ளைத்தனமாக விக்கெட்டை விட்ட பேர்ஸ்டோவ் – அந்த ரன் அவுட் சரியா… தவறா…?

Ashes 2023, Bairstow Run Out: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மிகவும் பரபரப்பாக நடைபெற்று ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி இன்றோடு நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று, 254 ரன்களை எடுத்தால் வெற்றி என இங்கிலாந்தும், அதற்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என ஆஸ்திரேலியாவும் களம் கண்டன.  டக்கெட் 50 ரன்களுடனும், கேப்டன் ஸ்டோக்ஸ் 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். நாளின் தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவிக்கும் முனைப்பில் இருந்த இந்த … Read more

இந்த முறை உலகக்கோப்பையை கைப்பற்றுவது இந்த அணி தான் – சுனில் கவாஸ்கர் உறுதி

மும்பை, ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இன்னும் இந்த தொடரானது துவங்குவதற்கு 100 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள வேளையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை அதிகாரபூர்வமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதன்படி அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற … Read more

இந்திய அணியில் விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட் எடுத்திருப்பேன் – பாகிஸ்தான் பந்துவீச்சாளர்

பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட இருக்கிறது. அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலக கோப்பை லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தாலும், அந்நாடு இந்தியாவில் வந்து விளையாடுவதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை கொடுக்கவில்லை.  பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து, அந்த … Read more

ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் வெளியேற்றம்: ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி இதோ!

2023 ஆசியக் கோப்பையில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறும். ஆசிய கோப்பையின் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. போட்டியானது ஹைபிரிட் மாதிரியில் விளையாடப்படும், மேலும் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ ஹோஸ்டாக பரிந்துரைக்கப்படும். இந்திய அணி 2016 மற்றும் 2018ல் ஆசிய கோப்பை பட்டங்களை தொடர்ச்சியாக வென்றது. இந்தியாவிற்காக MS தோனி 2016 மற்றும் ரோஹித் சர்மா 2018ல் ஆசியக் கோப்பைப் பட்டங்களை தொடர்ச்சியாக வென்றனர்.  கடந்த சீசனில் 20 ஓவர் வடிவத்தில் UAE இல் … Read more

11 Overs In ODI: வித்தியாசமான சாதனை! ஒரு நாள் கிரிக்கெட்டில் 11 ஓவர் வீசிய பெளலர்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஈடன் கார்சன் 11 ஓவர்கள் வீசினார். இதனால் நியூசிலாந்து அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இலங்கை – நியூசிலாந்து இடையிலான மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தவறான கணக்கீட்டின் காரணமாக ஒரு பெளலர் 11 ஓவர்களை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை பெண்கள் vs நியூசிலாந்து மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது எண்ணும் … Read more

10000 பெண்களுடன் உடலுறவு கொண்டதாக தம்பட்டம் அடித்த விளையாட்டு வீரர் மீது வழக்கு

விளையாட்டு உலகில் மூத்த வீரர் ஒருவர் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட பெண்களுடன் தான் உறவு வைத்திருந்ததாக விளையாட்டு வீரர் கூறியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மான்செஸ்டர் சிட்டி வீரர் மீது பலாத்கார, வன்முறை குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. யார் இந்த வீரர்? மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி,பெரிய வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக உள்ளனர். ஆடம்பர வாழ்க்கை வாழும் அவர், இலட்சக்கணக்கானவர்களின் ஆதர்ச நாயகன். ரசிகர்கள் … Read more

முதல் முறையாக உலகக்கோப்பைக்கு தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ்… அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

West Indies Out Of World Cup 2023: ஜிம்பாப்வேயில் நடந்து வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்த மேற்கு இந்திய தீவுகள், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறிவிட்டது.   தற்போது நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு குரூப்பில் முதல் இடத்தை பிடிப்பவர்கள் தான் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறுவார்கள். அந்த வகையில், தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இடத்திற்கு இனி … Read more

உலகக்கோப்பை தகுதிச்சுற்று; ஸ்காட்லாந்து அபார பந்து வீச்சு…வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்னுக்கு ஆல் அவுட்…!

ஹராரே, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பஒ தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த சூப்பர் 6 தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் ஆடி வருகின்றன. … Read more

நான் இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு அட்டகாசமாக விளையாடிய அவர் மீது இந்த ஐபிஎல் போட்டியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையிலும் அவருக்கு இடம் கிடைத்தாலும், வயது மற்றும் இப்போதைய பார்ம் காரணமாக இனி இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கை இழக்காத தினேஷ் கார்த்திக், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் … Read more

உலக கோப்பை மைதானங்களை ஆய்வு செய்ய பாகிஸ்தான் பாதுகாப்பு குழு இந்தியா வர உள்ளதாக தகவல்

லாகூர், அகமதாபாத், இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. அந்த எட்டு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். அந்த எட்டு அணிகளை தவிர்த்து எஞ்சிய இரு இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதிச்சுற்று போட்டிகள் … Read more