மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்… பால்வளத்துறை ஒதுக்கீடு!
Minister Mano Thangaraj: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவான மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பால்வளத்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Minister Mano Thangaraj: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவான மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பால்வளத்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை: “ரேஷன் கடைகளில் கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் திராவிட ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நடைபெறாத துறையே இல்லை. அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் பொது விநியோக திட்டத்தில், மக்களுக்கு இலவச உணவுப்பொருள் வழங்குகிறோம் … Read more
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, … Read more
புதுச்சேரி: விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. பல்வேறு விசாக்களில் வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இந்நிலையில் புதுச்சேரியில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர். இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து … Read more
திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விருந்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
சென்னை: சென்னையில் வங்கி மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான சிபிஐ வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாநகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் என்ற புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்னிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் திறந்து வைத்தார். … Read more
Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவை இன்று (ஏப்.28) காலை கூடியதும் முதல்வர் ஸ்டாவில் விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு வரும் செப்டம்பருக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார். பேரவையில் … Read more
சென்னை: சென்னை காசிமேட்டில் வெளி மாநில மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த 15-ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், காசிமேட்டில் இருந்து விசைப் படகுகள் ஆழ்கடலுக்குச் செல்லவில்லை. சிறிய மற்றும் மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் அண்மைக் கடல் பகுதியில் இருந்து மீன்பிடித்து வருகின்றனர். இதனால், குறைந்த அளவு மீன்களே வருகின்றன. இதனால், மீனவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து மீன்களை வாங்கி … Read more
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரியில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், இதுவரை எந்தக் கட்சியிலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், நாதக-வில் தனக்கு என்ன நடந்தது… விலகலுக்கான காரணம்… எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மனம்திறந்து பேசினார் காளியம்மாள். மீனவக் குடும்பத்தில் பிறந்து ஒரு சமூக செயல்பாட்டாளராக வளர்ந்த உங்களுக்கு நாதக அறிமுகம் … Read more