“அதிமுக ஆட்சி அமைந்ததும் கிட்னி முறைகேடு மீது நடவடிக்கை” – நாமக்கல்லில் பழனிசாமி உறுதி

நாமக்கல்: “அதிமுக ஆட்சி அமைந்துவுடன் கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு, யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாமக்கல்லில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: ”திமுக ஆட்சியில் குடிக்கும் நீரில் மலம் கலக்கப்படுகிறது. இந்த ஆட்சி வந்தபோது வேங்கைவயல் சம்பவத்தில் குற்றத்தில் … Read more

உஷார் மக்களே.. கோவை டூ வேலூர் வரை.. இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 10) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நவாஸ்கனி வெற்றிக்கு எதிரான வழக்கில் ஒபிஎஸ் நேரில் ஆஜராகி 38 ஆவணங்கள் சமர்ப்பிப்பு

சென்னை: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ்கனி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி 38 ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 … Read more

இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடி! கூட்டணியில் விஜய்யா? – அண்ணாமலை சொன்ன பதில் என்ன?

Annamalai Latest News Updates: அதிமுக கூட்டத்தில் தவெக கொடி அசைக்கப்பட்டது குறித்தும், பிழையார்சுழி என இபிஎஸ் பேசியது குறித்தும் அண்ணாமலை பேசியதை இங்கு காணலாம். 

30 மீனவர்கள் கைது எதிரொலி: உடனடி நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இன்று (அக்.9) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக … Read more

தவெக மதியழகனுக்கு 2 நாள் போலீஸ் கஸ்டடி! அடுத்து நடக்கப்போவது என்ன?

TVK Mathiyazhagan In Police Custody : கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்  கழக பரப்பரைக் கூட்டத்தில்  விஜய் பேசும்போது ஏற்பட்ட நெரிசல் சிக்கி  41 பேர் உயிரிழந்தனர்.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக தமிழகத்தில் நாளை … Read more

விஜய் உயிருக்கு ஆபத்து.. நயினார் நாகேந்திரன் அடுக்கும் காரணங்கள்!

Nainar Nagendran: தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து உள்ளது என்றும் கரூர் சென்றால் நடிகர் விஜய்க்கு ஆபத்து என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் மிக நீளமான கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு: சிறப்பம்சங்கள் என்ன?

சென்னை: கோவையில் 1,791 கோடி ரூபாய் செலவில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டரில் கட்டி முடிக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1,791 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் … Read more

விஜய் வீட்டில் பாம்…? சென்னையில் ஒருவர் – மிரட்டலுக்கு அவர் சொன்ன காரணம் என்ன?

Bomb Threat To Vijay House: விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணத்தை போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.