அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதமானது: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்

விழுப்புரம்: செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆக.12) கடிதம் அனுப்பியுள்ளார். பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பொதுக்குழுக் கூட்டத்தை தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தி முடித்தார். இக்கூட்டத்தில், பாமக தலைவராக அவர் ஓராண்டுக்கு நீட்டிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று … Read more

”மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிப்போம்” – கிருஷ்ணகிரியில் இபிஎஸ் உறுதி

கிருஷ்ணகிரி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிப்போம் என கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ மூன்றாம் கட்ட பிரச்சாரத்தின் 2-வது நாளான இன்று (ஆக.12) கிருஷ்ணகிரியில் ரவுண்டானா பகுதியில் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ”திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும் என பேசியுள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் கோவை, … Read more

பி.எட்., படிப்பு: மாணவர் சேர்க்கை ஆணையை டவுன்லோட் செய்வது எப்படி?

Tamil Nadu Government: இந்த கல்வியாண்டுக்கான பி.எட்., மாணாக்கர் சேர்க்கை ஆணையை இணைய வழியில் நாளை முதல் (ஆக. 13) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரயில்கள் தாமதம்

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராமேசுவரம் வரவேண்டிய ரயில்களும், ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திறந்து வைத்தார். ஏப்ரல் 7-ம் தேதி முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி, கோவை மற்றும் வடமாநிலங்களுக்கும் ரயில் சேவைகள் நடைபெறுகின்றன. இந்த புதிய ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் … Read more

ராம பகவான் பைத்தியமா? பாடலாசிரியர் வைரமுத்து பேச்சால் எழுந்த சர்ச்சை!

Vairamuthu Lord Ram Controversy : கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, ராமர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்த முழு விவரம், இதோ.

ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டு சிறப்பு வெளியீடு: ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டை முன்னிட்டு, இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடான ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார். இந்து தமிழ் திசை பதிப்பகம் சார்பில் பெரியார், ராஜாஜி, அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் குறித்து சிறப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘அறவாழ்வின் அடையாளம்’ என்ற … Read more

நசரத் பேட்டையில் திருப்புலியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு

புகார் அளித்தால் நிர்வாண வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டிய நபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.

“தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது” – அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: “தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது. ஓரிரு நாட்களில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்” என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி உறையூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னையில் போராட்டம் நடத்திவரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, துறை அமைச்சராகிய நான் சந்தித்துப் பேசவில்லை என்பது தவறு. நாங்கள் 4 நாட்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் … Read more

ரஜினி ரசிகர்களுக்கு குட் நியூஸ்… தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு – முழு பின்னணி

Coolie Special Show: ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்க கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக கூறி ரத்து செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கடந்த 2023-ம் அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவு 2033-ம் … Read more