NDA கூட்டணியில் விஜய்? மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பதில்!

முக்குலத்தோர் வாக்குகளுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. நாம் நம்முடைய தலைவர்களை போற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் உணர்வு என்று எல் முருகன் பேட்டி அளித்துள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை‌: பிரேமலதா விஜயகாந்த் தகவல்

தரு​மபுரி: தரு​மபுரி​யில் தேமு​திக நிர்​வாகி இல்​லத் திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 234 தொகு​தி​களுக்​கும் பொறுப்​பாளர்​களை நியமித்​து, தேர்​தல் பணி மேற்​கொள்​கிறோம். இதற்​காக விரை​வில் மாநில, மாவட்​டச் செய​லா​ளர்​களுக்​கான கூட்​டம் நடை​பெற உள்​ளது. வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் மாநாடு நடத்த உள்​ளோம். தொடர்ந்து எங்​கள் பயணம் தொடரும். பாஜக​வில் இருந்​து, கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்கு எங்​களுக்கு எந்த அழைப்​பும் வரவில்​லை‌. அதே​நேரத்​தில், … Read more

டிக்கெட் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பயணிகளுக்கு அரை மணி​ நேரத்தில் பணம் திரும்ப வரும்

சென்னை: பேருந்துகளில் பயணச்சீட்டுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்தில் பயணியின் வங்கி கணக்கில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு சில்லறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதையடுத்து, யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் போன்றவற்றை பயன்படுத்தும் வகையிலான பயணச்சீட்டு கருவிகளை பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் கொள்முதல் செய்ய போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டன. … Read more

வேலூர் அடுத்த தீர்த்தகிரி முருகன் கோயிலில் உலகின் 3-வது உயரமான முருகன் சிலை பிரதிஷ்டை

வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேலூர் அடுத்த ரங்காபுரத்தை யொட்டியுள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடாபுரம் அடுத்த புதுவசூர் என்ற இடத்தில் 500 அடி உயர தீர்த்தகிரி மலை உள்ளது. இந்த மலையில் பழமையான வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் முன்பு 92 அடி உயரத்தில் உலகிலேயே … Read more

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 9) முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஜூன் 10) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், … Read more

அண்ணாமலை பெயரை சொன்னதும் விசிலடித்து ஆரவாரம் செய்த நிர்வாகிகள்: மதுரை பாஜக கூட்டம் ஹைலைட்ஸ்

மதுரை: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் கூறப்பட்டபோதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். மதுரை ஒத்தக்கடையில் இன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அமித்ஷா உட்பட கூட்டத்தில் … Read more

முருகன் பெயரிலான பாஜக மாநாட்டால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: திருமாவளவன் 

கொடைக்கானல்: முருகன் பெயரிலான பாஜக மாநாட்டால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள், தமிழ் கடவுள் முருகனும் ஏமாற மாட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”பாஜக அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 14 ஆம் தேதி திருச்சியில் மத சார்பின்மை காப்போம் என்ற … Read more

“திமுகவை தோற்கடிக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்” – மதுரையில் அமித் ஷா பேச்சு

மதுரை: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று கூறுகிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னால் தோற்கடிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்திருக்கிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: “தமிழகத்துக்கு வந்து தமிழ் … Read more

கொடைக்கானலில் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை முடிவு

திண்டுக்கல்: ஆபத்தை உணராமல் ரீல்ஸ்க்காக கொடைக்கானல் குணா குகை தடுப்பு கம்பிகளை கடந்து சென்று வீடியோ எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகை, கடந்த ஆண்டு வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்திற்கு பிறகு மேலும் பிரபலமடையத் துவங்கியுள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தவறவிடாத இடமாக குணா குகை சுற்றுலாத்தலம் உள்ளது. இதனால் மற்ற சுற்றுலாத்தலங்களை விட குணா குகை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் … Read more

'என்னால் திமுகவை தோற்கடிக்க முடியாது, ஆனால்…' தேர்தலை குறிவைத்து அமித்ஷா பேச்சு!

Amit Shah Madurai Speech: காதுகளை தெளிவாக வைத்து கொள்ளுங்கள்… தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.