இல்லம்தோறும் மூவர்ணக் கொடி திட்டத்தில் அஞ்சலகங்களில் ரூ.25க்கு தேசியக் கொடி விற்பனை

மதுரை: இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்ற திட்டத்தில் அஞ்சலகங்களில் ரூ.25க்கு தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. அதனையொட்டி நேற்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அஞ்சல்துறையினர் ரூ.25க்கு தேசியக்கொடியை விற்பனை செய்தனர். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இல்லங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். … Read more

அமலாக்கத்துறை வைத்த மெகா 'செக்'.. செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன்..

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி காவலில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரரான அசோக் குமாரின் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தனது துறையில் பணி நியமனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய … Read more

குமரி | பழங்குடி மக்களை அச்சுறுத்திய புலி – ஒரு மாதத்துக்கு பின் பிடிபட்டது

நாகர்கோவில்: குமரி வனப்பகுதியான பேச்சிப்பாறை, சிற்றாறு, பத்துகாணி பகுதியில் மலைவாழ் மக்களை அச்சுறுத்திய புலி நேற்று மாலை பிடிபட்டது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்தனர். பேச்சிப்பாறை, சிற்றாறு சிலோன் காலனியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு மாதமாக புலியின் நடமாட்டம் இருந்தது. அங்குள்ள ஆடு மற்றும் கால்நடைகளை புலி வேட்டையாடியது. அடுத்தடுத்து ஆடு, மாடுகளை கடித்துக் கொன்றதால் அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் அச்சம் அடைந்தனர். புலியை பிடிக்க … Read more

கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை: மக்களே தயாராகிக்கோங்க! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக நாளையும், நாளை மறுநாளும் (ஆகஸ்ட் 10, 11) தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், … Read more

ஆவின் பணி நியமனம் ரத்துக்கு எதிரான வழக்கில் தேர்வு நடத்திய பல்கலைக்கழகங்கள் சேர்ப்பு

மதுரை: ஆவின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேர்வு நடத்திய பல்கலைக்கழகங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, சுமதி உட்பட 41 பேர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், “விருதுநகர், திருச்சி, மதுரை ஆவினில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ல் வெளியானது. நாங்கள் அந்த பணிக்கு விண்ணப்பத்தோம். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றிப்பெற்று 2021ல் பணியில் சேர்ந்தோம். பின்னர் ஆவினில் … Read more

"செங்கோல் சுக்குநூறாக தகர்ந்த கதை மோடிக்கு தெரியுமா..?".. திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி ஆவேசமாக கருத்து தெரிவித்தார். தமிழ்நாட்டின் வரலாறு மோடிக்கு தெரியுமா என்றும், செங்கோல் தகர்ந்த கதையை மோடி கேள்விப்பட்டதுண்டா எனவும் கனிமொழி கேள்வியெழுப்பினார். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அண்மையில் காங்கிரஸ் கொண்டு வந்தது. இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது திமுக எம்.பி. … Read more

"பணம் இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைக்கே செல்ல முடியும்" – உயர் நீதிமன்றம்

மதுரை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அடிப்படை வசதிகளும், பொதுமக்கள் எதிர்பார்க்கும் வசதிகளும் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு வில்,”என் கணவர் வேல்முருகன். நான் பிரசவத்துக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 17.5.2014ல் சேர்ந்தேன். மறுநாள் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் முதலில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு, பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

"என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க".. காமராஜரின் சாபம் சும்மா விடாது.. கோபத்தில் கொந்தளித்த அண்ணாமலை!

விருதுநகர்: “ பிறந்த விருதுநகர் மாவட்டத்தை என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க.. உங்களையெல்லாம் அவரது சாபம் சும்மா விடாது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசத்துடன் கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருதுநகரில் இன்று பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது: காமராஜர் ஐயா பிறந்த ஊரான விருதுநகரை இந்தியாவிலேயே பின்தங்கிய மாவட்டமாக மாற்றியுள்ளது. இதனால் விருதுநகரை மத்திய அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றால் காமராஜரின் சாபம் திமுகவை … Read more

வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த விரைவில் சட்டம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் 

மதுரை: வணிக நோக்கத்தில் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த சட்டம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் நீர் வளத்துறை செயலாளர் தெரிவித்தார். சிவகாசி ஆணையூர் அண்ணாமலையார் காலனியைச் சேர்ந்த ஏ.எஸ்.கருணாகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ஆணையூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் பலர் வணிக நோக்கத்தில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். பட்டா நிலங்களில் பல நாட்களாக பயன்பாடு இல்லாமல் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்து அதில் வணிக … Read more

சிறையில் என்னை கொடுமைப்படுத்த செந்தில் பாலாஜியே காரணம்.. சவுக்கு சங்கர் 'ஷாக்' தகவல்

சென்னை: கடலூர் சிறையில் நான் அனுபவித்த கொடுமைகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என பிரபல யூடியூபரும், சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி தொடர்பான புகார்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவர் சிறை செல்வதற்கு முக்கியமான காரணமாக இருந்த சவுக்கு சங்கர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவ் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த அ ஆட்சிக்காலத்தின் போது எடப்பாடி பழனிசாமியின் அரசையும், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் … Read more