புதிய அரங்கில் 5 நாட்களா ஜல்லிக்கட்டு? – குழப்பத்தில் மதுரை மாவட்ட அதிகாரிகள்

மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கும் புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் ஆரம்பத்தில் 5 நாட்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக அறிவிக்கபட்டநிலையில் தற்போது ஒரு நாள் மட்டும் போட்டியை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் எதிர்ப்பால் அந்த அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி ஒரு நாளா? 5 நாட்களா? என முடிவெடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகிகள் குழப்பமடைந்துள்ளனர். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பார்க்க உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்கள் திரண்டனர். … Read more

“அதிமுகவின் இரு பெரும் தலைவர்களின் கோட்டை சேலம்” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

மேட்டூர்: அதிமுகவின் இரு பெரும் தலைவர்களின் கோட்டை சேலம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லிகுந்தம், சாத்தப்பாடி பகுதிகளில் மேச்சேரி ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட அதிமுக கொடியை இன்று (ஜனவரி 21) அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். முன்னதாக, அவருக்கு, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மல்லிகுந்தத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து … Read more

மாநாடு, கும்பாபிஷேகம் எதுவாகினும் பொதுமக்களுக்கு இடையூறின்றி நடத்தப்பட வேண்டும்: அன்புமணி கருத்து 

தருமபுரி: திமுக மாநாடாக இருந்தாலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவாக இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறின்றி நடத்தப்பட வேண்டும் என தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் இன்று நடந்த பாமக பிரமுகர்கள் இல்ல திருமண விழாக்கள் மற்றும் காதணி விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி வந்தார். இண்டூர் அடுத்த நல்லானூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “அயோத்தியில் நாளை நடைபெற இருக்கும் … Read more

'அதிமுகவின் உள்ளே – வெளியே ஆட்டம் பாஜக போட்டுக் கொடுத்த நாடகம்' – முதல்வர் ஸ்டாலின் சாடல் @ சேலம் இளைஞரணி மாநாடு

சேலம்: “பத்தாண்டு காலமாக தமிழகத்தை எல்லா வகையிலும் பாழ்படுத்திய கட்சி, அதிமுக அவர்கள் அழிவுவேலைகள் அனைத்தையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. இப்போது அவர்கள் ஆடும் ’உள்ளே-வெளியே’ ஆட்டம், பாஜக போட்டுக் கொடுத்த நாடகம். பழனிசாமியின் பகல் வேஷத்தை அதிமுக தொண்டர்களே நம்பத் தயாராக இல்லை, அதுதான் உண்மை. பாஜக – அதிமுக இவர்கள் இரண்டு பேரின் படுபாதக செயல்களை தடுப்பதுதான் நம் முன்னால் இருக்கும் முக்கியக் கடமை” என்று சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில் … Read more

'மத்திய அரசை கேள்வி கேட்டால் ‘ICE’ நம்மைத் தேடி வரும்' – சேலம் இளைஞரணி மாநாட்டில் கனிமொழி பேச்சு

சேலம்: “ஒரு தனியார் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்படக்கூடிய கோயிலுக்காக அரை நாள் விடுமுறையும், இலவச ரயிலும் விடப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் கேள்விக்கேட்க கூடாது. கேள்வி கேட்டால் நமக்கு ICEவைப்பார்கள். ICE என்றால், Income Tax,CBI,ED இவை மூன்றும் வரும். யார் கேள்வி கேட்டாலும், இவை அனைத்தும் நம்மை தேடி வரும்” என்று சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று … Read more

ராமர் கோயில் திறப்பு: தமிழகத்தில் நாளை வீடுகள், குடியிருப்புகளில் தீபம் ஏற்றி வழிபட ஆளுநர் ரவி அழைப்பு

சென்னை: “நாளை ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ராமர் கோயிலை பெறும். இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழகத்தில் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு ராஜ்பவன் எக்ஸ்தளப் பக்கத்தில், “நமது தேசம் இப்போதெல்லாம் … Read more

வருகிறார் நித்யானந்தா… ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார்

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பங்கேற்க இருப்பதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.  

மதுரை | 3 நாள் சுற்றுப் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

மதுரை: தமிழகத்தில் 3 நாள் சுற்றுப் பயணத்தை முடித்த பிரதமர் மோடி இன்று (ஞாயிறு) மதியம் மதுரை விமான நிலையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தல் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தில் ஆன்மிக சுற்றுப் பயணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழகத்துக்கு வந்தார். நேற்று ராமேசுவரத்துக்கு வந்தவர், ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தமாடி தரிசனம் … Read more

ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.   

அயோத்தி  ராமர் கோயில் கும்பாபிஷேகம் | தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு … Read more