சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி… தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு!

PM Modi TN Vist: கேலோ விளையாட்டு தொடர் தொடங்கிவைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக தமிழ்நாட்டில் மூன்று நாள்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்தடைந்தார்.

திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிபுரிந்த இளம் பெண் புகாரில் வழக்குப் பதிவு: காவல் துறை சொல்வது என்ன?

சென்னை: திருவான்மியூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்தபோது, அவ்வீட்டின் உரிமையாளரர்களான கணவன், மனைவி தன்னை அசிங்கமாக பேசியும், அடித்தும் காயப்படுத்தியதாகவும் கூறி 18 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: கடந்த ஜன.16 அன்று உளுந்தூர்பேட்டை, அரசு மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், மேற்படி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு … Read more

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் பட்டியலின இளம்பெண்ணுக்கு சித்ரவதை..! கதறி அழும் தாய்..! என்ன நடந்தது?

திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்து வந்த பட்டியலின இளம்பெண்ணுக்கு சூடு வைத்து டார்ச்சர் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கண்ணீர் மல்க பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றம் தடை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாகக் கூறி பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் (PUEU) சார்பில் இளங்கோவன் என்பவரும், அந்த அமைப்பு குறித்து கேள்வி … Read more

'பல்லு பட்ற போகுது…' ஆபாசமாக பேசிய அண்ணாமலை…? குவியும் எதிர்ப்புகள்

Tamil Nadu Latest News: உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த நேர்காணல் குறித்து பேசும்போது ஆபாசமான வார்த்தையை பயன்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மின்வெட்டை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 2030 ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டங்கள், 15,000 மெகாவாட் நீரேற்று மின்திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் மின்வெட்டை நிரந்தரமாக தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் அதிக அளவாக 4000 மெகாவாட் வரை மின்சாரப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் … Read more

தேர்தலுக்கு ரெடியாகும் திமுக… 3 குழுக்கள் அமைப்பு – யார் யாருக்கு என்ன பொறுப்பு?

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக மூன்று பணிக்குழுக்களை இன்று அறிவித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளை இங்கு காணலாம். 

திமுகவின் பிற்போக்குத்தனத்தை காட்டுகிறது உதயநிதியின் கருத்து: எல்.முருகன் @ ராமர் கோயில்

கோவை: கோவை கொடிசியா அருகே உள்ள தனியார் அரங்கில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாஜக தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தார். இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி … Read more

பழனியில் திருக்கல்யாணம், தைப்பூச தேரோட்டம் எப்போது? முழு விவரம் இதோ

palani thaipusam festival 2024: பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடக்கம்

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. வண்டலூா் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் முதல் கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. பொங்கலுக்கு பின், அனைத்து அரசு போக்கு வரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பு … Read more