பெரியார் பல்கலை. துணைவேந்தர் தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்றம் அடுக்கிய கேள்விகள்

சென்னை: ‘புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும்?’ என, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன் தொடர்ந்த வழக்கில் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ஆவணங்களை ஆய்வு செய்வதாகக் கூறி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி … Read more

உறைபனியில் உறைந்த உதகை: வெப்பநிலை மைனஸில் செல்லவும் வாய்ப்புள்ளதாக கணிப்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக உறைபனி தாமதமாகத் தொடங்கினாலும், பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உறைபனியில் உதகை உறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். கடந்தாண்டு அதிக அளவு மழை நாட்களைக் கொண்டிருந்ததால் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக உறைபனி தள்ளிப்போனது. நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உறைபனிப் பொழிவு இருக்கும் … Read more

Good News: விரைவில்.. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்

Chief Minister’s Breakfast Scheme: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் முதல்வர். இதுத்தொடர்பான அறிவிப்பு தமிழக பட்ஜெட் கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு எனத் தகவல்.

“மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” – உதயநிதி ஸ்டாலின் கருத்து

சென்னை: ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியலாக்கக்கூடாது என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார். சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.18) காலை தொடங்கி … Read more

வடகலை – தென்கலை அடிதடி… கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற கொடூரம் – என்னதான் பிரச்னை?

Tamil Nadu Latest News: பல ஆண்டுகளாக வாய் சண்டை தள்ளுமுள்ளோடு முடிவடையும் வடகலை தென்கலை பிரச்னை தற்போது கைகலப்பாக மாறி அடிதடி, கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. 

பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு: ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி (நாளை (19.01.2024) சென்னை வருகிறார். நேரு விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமரின் வருகையை ஒட்டி சென்னையில், பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி (நாளை (19.01.2024) சென்னை, பெரியமேட்டிலுள்ள, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா யூத் … Read more

ராமர் கோவில் வருவது பிரச்னை இல்லை… இதனால் திமுக எதிர்க்கிறது – உதயநிதி பளீச்

Tamil Nadu Latest News: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக விளக்கி உள்ளார்.

சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 1,200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 108 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் நேற்று காலை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டுறவுத் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் … Read more

அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பு நிலம் வழங்கிய பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு

மதுரை: மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலம் வழங்கிய வங்கி பெண் ஊழியர் பூரணம் அம்மாளின் வீட்டுக்கே சென்று, அமைச்சர் உதயநிதி அவரைப் பாராட்டினார். மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூரணம் அம்மாள். இவரது கணவர் உக்கிரபாண்டியன் இறந்ததால் வாரிசு அடிப்படையில் மதுரை தல்லாகுளம் கனரா வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுக்கு முன்பு காலமானார். மகள் நினைவாக… இந்நிலையில், … Read more

சாமானிய மக்களின் மனதில் ராமனின் வாழ்க்கையை நிலைநிறுத்தியவர் கம்பர்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

மயிலாடுதுறை: ‘ராமனின் வாழ்க்கையை, சாமானிய மக்களின் மனதில் நிலைநிறுத்தியவர் கம்பர்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மனைவியுடன் நேற்று வந்தார். அவருக்கு மாவட்டஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கம்பர் வாழ்ந்த இடமாகக் கூறப்படும், கம்பர்மேடு பகுதியைப் பார்வையிட்டார். பின்னர் ஆமருவி பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து கம்பர் மணிமண்டபத்தில் உள்ள கம்பர் சிலைக்கு மாலை … Read more