மிக்ஜாம் பாதிப்பு | இதுவரை ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தமிழக அரசு தகவல்
சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 34 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் மழையினால் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை ரிப்பன் கட்டடத்திலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த டிச.6-ம் தேதி … Read more