எண்ணூர் எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய குழு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: எண்ணூர் கழிமுக எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மழையின் போது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் மர்மமான முறையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் கசிவால் அங்குள்ள குடியிருப்புகளின் சுவர்களில் எண்ணெய் படிந்தது. மீன்பிடி படகுகள் மீதும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக … Read more

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை சென்னை வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த 7-ம் தேதி சென்னை வந்தமத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங்,பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர், தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ள சேதங்களைச் சீரமைக்க இடைக்கால நிவாரணமாக … Read more

அனைத்து மக்களின் உரிமைகளை மதிப்போம்: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: உலக மனித உரிமைகள் நாளில் அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாளில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நமது பொறுப்பை உணர்ந்து, அனைத்து மக்களின் உரிமைகளையும் மதிப்போம் என மீண்டும் உறுதியேற்போம். மனித உரிமைகளை மதிப்பதே நற்சமூகத்தின் வேராகும். ஆனால் நமக்கோ மனித உரிமை என்பது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் … Read more

கனமழை ஓய்ந்தும் 4 நாட்களாக நீர் வெளியேறாதது ஏன்? – தமிழக அரசு விசாரணை நடத்த மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை: கனமழை நின்று 4 நாட்களானபோதிலும் நீர் வடியாதது ஏன் எனதமிழக அரசு விசாரணை நடத்தவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். கனமழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய தொழில் முனைவோர், நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று சென்னை வந்தார். அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரதராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் முடிச்சூர் பகுதிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிப்பு விவரங்களை ஆட்சியர்கள் ஆ.ர. ராகுல் நாத்மற்றும் கலைச்செல்வி ஆகியோர் புகைப்படங்கள் மூலம் விளக்கினர். தொடர்ந்து மேற்கு … Read more

ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்படவில்லை: தமிழக அரசு விளக்கம் 

சென்னை: “ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தக் குறிப்பு:தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் … Read more

‘வேளச்சேரி பகுதியில் தொடரும் சவால்கள்’ – பிஎஸ்என்எல் @ சென்னை வெள்ளம்

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் பள்ளிக்கரணை, தரமணி இணைப்புச் சாலை, மற்றும் வேளச்சேரி பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் தொலைபேசி சேவையை மீட்டெடுப்பது சவாலாக உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பு: கனமழையால் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிலைமை மோசமடைந்ததால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அவசர உதவிக்கு அழைப்புகள் அதிக அளவில் வந்தன. களத்தகவல்களின்படி வேளச்சேரி தொலைபேசி இணைப்பகம் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டது. மற்ற தொலைபேசி இணைப்பகங்கள் பிஎஸ்என்எல் குழுவின் முயற்சியால் … Read more