அ.தி.மு.க பெயரை உச்சரித்த ஓ.பி.எஸ்; கொந்தளித்த இ.பி.எஸ்: சட்டசபையில் நேரடி மோதல்

அ.தி.மு.க பெயரை உச்சரித்த ஓ.பி.எஸ்; கொந்தளித்த இ.பி.எஸ்: சட்டசபையில் நேரடி மோதல் Source link

புளுகான் கொட்டாய் | சட்டப்பேரவையில் கொந்தளித்த அதிமுகவினர்! அதிமுக எம்.எல்.ஏ., பரபரப்பு அறிக்கை!

“ஜெகன் கொலையில் சம்மந்தப்பட்டவர் புளுகான் கொட்டாய் அதிமுக கிளைச்செயலாளர் சங்கர் என்பது தெரிய வந்துள்ளது. இதுவே இதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்ப்பு உள்ளது என்ற உள் அர்த்ததுடன் தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு, அதிமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுப்பட்டனர்.  இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பொய்யான, தவறான தகவலை தெரிவித்து இருப்பதாக அதிமுக தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஜெகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கர் அதிமுக.,வில் எந்தப் பொறுப்பிலும் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்: அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, கடந்த மார்ச் 9-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பேரவையில் … Read more

கோடியக்கரையில் 2,000 மான்கள்

வேதாரண்யம்: நாகப்பட்டினம்  மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 25 சதுர கிலோ  மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், நரி, குதிரை, முயல், காட்டுப்பன்றி, குரங்கு, காட்டு பூனை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளி மான்களும், 100க்கும் மேற்பட்ட குதிரைகளும், 500க்கும் மேற்பட்ட குரங்குகளும், வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இளம்பெண்ணை திருமணம் செய்ய வலுக்கட்டாயமாக கடத்திய ஐகோர்ட் வழக்கறிஞர் கைது.!

சென்னையில் உள்ள திருவொற்றியூரில் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் அ.தி.மு.க. மேற்கு பகுதி மாணவரணி செயலாளராகவும் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில், கோகுல கிருஷ்ணனுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் அந்த இளம்பெண் கோகுலகிருஷ்ணனுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்.  இதனால், ஆத்திரமடைந்த கோகுல கிருஷ்ணன் கடந்த 21-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே வந்த … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”ரம்மி உள்ளிட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டின் காரணமாக பணத்தை இழந்து தமிழகத்தில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் தங்களின் சேமிப்பு பணம், சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட … Read more

திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்

திருச்சி: மதிமுகவினருடன் தகராறு வழக்கில் திருச்சி கோர்ட்டில் நேற்று சீமான் ஆஜரானார். மதிமுக பொது செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தனர். அப்போது இவர்களை வரவேற்பதில் ஏற்பட்ட தகராறில் இரு கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரரின் டூவீலர் அடித்து நொறுக்கப்பட்டது.இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் சீமான் மற்றும் அவரது கட்சியினர் 14 பேர் மீதும், மதிமுகவினர் 5 … Read more

திமுக மாஜி சேர்மேனின் சாதிவெறியால், தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளர்! 

உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் சாதி வெறியுடன் திட்டியதால், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் :  உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் சுடலை மாடனை, அப்பேரூராட்சி தலைவரின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆயிஷா சாதியைச் சொல்லி இழிவாக திட்டியதாக சொல்லப்படுகிறது. ஆயிஷாவின் வீட்டின் அருகே கிடந்த குப்பையை அல்லாததால், சாதிவெறியுடன் சுடலை மாடனை திட்டியுள்ளார் ஆயிஷா, இதனால் அவமானமடைந்த சுடலை … Read more