மதுரையில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு: தினந்தோறும் புதிதாக 6 முதல் 7 பேர் பாதிப்பு

மதுரை: மதுரையில் ஒரு நாளைக்கு 6 முதல் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. 80 பேருக்கு தினமும் மற்ற வைரஸ் காய்ச்சலும் உறுதி செய்யப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக, மதுரை மாநகராட்சி பகுதியில் நீர்வரத்துக் கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வாரி இருக்க வேண்டும். அதுபோல், குடியிருப்புகள், பொது இடங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மழைநீர் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். டெங்கு பரவுவதற்கு காரணமான பொருட்களை அகற்றியிருக்க வேண்டும். … Read more

மிக்ஜாம் புயல்: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள்..!

மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சென்னை உள்ளிட்ட புயல் பாதிக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.  

மிக்ஜாம் புயல் | தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பொழிவும், பலத்த காற்றும் வீசப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மாவட்டங்களில் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது. ஏற்கெனவே மழை மற்றும் புயலை கருத்தில் கொண்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் இயங்கும் பள்ளி, கல்லூரிகள், அரசு … Read more

மிக்ஜாம் புயல்: 8000 மணல் மூட்டைகள்… 31 புல்டோசர், 24 ஜேசிபி – வேலூரில் ஏற்பாடுகள் தயார்

மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்க இருக்கும் நிலையில் மீட்பு பணிகளுக்காக 8000 மணல் மூட்டைகள் மற்றும் ஜேசிபி, புல்டோசர் இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.   

மிக்ஜாம் புயல் | 4 மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (டிச.4) திங்கட்கிழமை அன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பொழிவும், பலத்த காற்றும் வீசப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு பள்ளி, … Read more

மிக்ஜாம் புயல்: நாளை மெட்ரோ ரயில் சேவையில் பெரிய மாற்றம்! என்ன தெரியுமா?

Michaung Storm Metro Train Schedule: மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மிக்ஜாம் புயல் | சென்னை மெட்ரோ ரயில் சேவையின் திங்கள்கிழமை அட்டவணையில் மாற்றம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நாளை திங்கள்கிழமை (டிச.4) ஒருநாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில்கள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை (டிச.4) மிக்ஜாம் (MICHAUNG) புயல் காரணமாக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் … Read more

மிக்ஜாம் புயல்; சென்னை மெரீனா மூடல்.. பொதுமக்களுக்கு அனுமதியில்லை

மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கியிருக்கும் நிலையில் சென்னை மெரீனா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

“மாற்றம் அமைய விழைகிறேன்” – 4 மாநில தேர்தலில் வென்ற கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு எனது வாழ்த்துகள். அவர்களது ஆட்சிக் காலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நல்ல மாற்றத்தையும், வளர்ச்சியையும் வளத்தையும் அளிப்பதாக அமைய விழைகிறேன்” என்று 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், … Read more

மிக்ஜாம் புயல்: 110 கிமீ வேகத்தில் கரையை கடக்குமாம்..! இந்த மாவட்ட மக்கள் கொஞ்சம் உஷார்

மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கும் சூழலில் எந்தெந்த மாவட்டங்களில் மழை மற்றும் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.