கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமா? இத தெரிஞ்சுக்கிட்டு போங்க!

கொடைக்கானலில் இடைவெளி இல்லாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மழை. செண்பகனூர் அருகே மண் சரிவு, மண் சரிவினை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரம்.  

சீமான் வழக்கு போட்டால் ஆவணங்களுடன் நிரூபிப்பேன்: நடிகை விஜயலட்சுமி

சென்னை: நான் ஏதோ பொய் சொல்லும் பெண்ணாக சீமான் சித்தரிக்க முயன்றால் இந்த மோதல் முடிவுக்கே வராது என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி, “சீமான் மீது கூறிய புகார்களை நிரூபிப்பேன். வீரலட்சுமியின் வீட்டிலிருந்து நான் வெளியேறிய போது சாட்டை துரைமுருகனிடம் பேசினேன். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள். பாலசுப்பிரமணியன் என்ற வழக்கறிஞரை அனுப்பி வைத்தார் சாட்டை துரைமுருகன். புகாரை வாபஸ் பெற்றுவிட்டு எனது அக்காவுடன் … Read more

73-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: பிரதமர் மோடிக்கு ஆளுநர்கள், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது 73-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு நல திட்டங்களை வழங்கினர். மேலும், தமிழகம், தெலங்கானாஆளுநர்கள், முதல்வர் மற்றும்அரசியல் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பிரதமருக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள். தேசத்தை வழிநடத்த அவருக்கு நல்ல ஆரோக்கியமும், ஊக்கம் அளிக்கும் தலைமைத்துவத் துக்காகவும் பிரார்த்தனைகள். தெலங்கானா ஆளுநர் தமிழிசை … Read more

டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் மாலை 5 – இரவு 10 மணி வரை கட்டாயம் இருக்க உத்தரவு

சென்னை: விற்பனை அதிகமாக இருக்கும் நேரமான மாலை 5 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக்நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள், மதுபானம்,பீர் வகைகளை அரசு நிர்ணயித்தவிலையைவிட கூடுதல் விலைக்குவிற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவார். மேலும், கூடுதல் விலை விற்பனை … Read more

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு மழை பெய்யும்: வேளாண் பல்கலை. கணிப்பு

கோவை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான மழையளவு இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இது தொடர்பாக, பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் பல்கலை.யின் கால நிலை ஆராய்ச்சி மையத்தில், வடகிழக்கு பருவமழை காலத்துக்கான ( அக்டோபர் முதல் டிசம்பர் வரை ) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு … Read more

நடிகை விஜயலட்சமி புகார் | வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்: நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு

சென்னை: 2011-ல் இந்த வழக்கு கொடுக்கப்படுகிறது. திமுக காங்கிரஸ் தூண்டுதலின் பேரில்தான் இந்த வழக்கு கொடுக்கப்படுகிறது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதில் உண்மைத்தன்மை இல்லை என்பதால் தூக்கி எறிந்தார். எட்டு முறை கருக்கலைப்பு செய்ததாக கூறுவதெல்லாம் நகைச்சுவையானது என்று நடிகை விஜயலட்சுமி புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் கூறியுள்ளார். திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த ஆக.28-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், இன்று (செப்.18) 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (திங்கள்கிழமை) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. … Read more