மிக்ஜாம் புயல்: 110 கிமீ வேகத்தில் கரையை கடக்குமாம்..! இந்த மாவட்ட மக்கள் கொஞ்சம் உஷார்

மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கும் சூழலில் எந்தெந்த மாவட்டங்களில் மழை மற்றும் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 125 அடியாக இருந்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் உட்பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே மழையில்லை. கடந்த இரண்டு நாட்களாக நல்ல வெயில் அடித்தது. ஆனாலும் நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலையிலும், மலையடிவாத்தை ஒட்டியுள்ள ஊர்களி்லும் நல்ல மழை பதிவானது. இதன் காரணமாக களக்காடு … Read more

ரகசிய கோப்புகள் சூறையாடல்… லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாகத்துறை பகீர் புகார் – முழு விவரம்!

ED Complaint To TN DGP: அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் சட்ட விரோதமாக சூறையாடப்பட்டதாக அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்தது. 

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை – தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு @ கடலூர் மாவட்டம்

விருத்தாசலம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்றும் நாளையும், கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக மிதமான மழை பெய்து வருகிறது. இடையே வெயில் அடித்தாலும், மழை தொடர்வதால் தரைப்பகுதிகள் ஈரப்பதமாகவே உள்ளன. தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. … Read more

மிக்ஜாம் புயல்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..! மீட்பு படைகள் தயார் நிலையில்

மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.   

கும்மிடிப்பூண்டி அருகே நீரில் மூழ்கிய தரைப்பாலம்: 20+ கிராமங்கள் பாதிப்பு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த காரணி ஊராட்சியில் தரைப் பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த காரணி ஊராட்சியில் இருந்து கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த அஞ்சாத்தம்மன் கோயில் பகுதிக்குச் செல்வதற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் உள்ளது. இந்த தரைப் பாலத்தின் வழியாக எருக்குவாய், நெல்வாய், எருக்குவாய் கண்டிகை, முக்கரம்பாக்கம், பாலேஸ்வரம், மங்களம், சந்திராபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் … Read more

மிக்ஜாம் புயல்: 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை-தனியார் நிறுவனங்களுக்கு லீவ்!!!

 Michaung Storm General Leave: மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் விட்டுவிட்டு பெய்யும் கனமழை: பலத்த காற்று வீசுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மிக்ஜாம்: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. வடமேற்கு … Read more

அந்த 10 மணிநேரம்… நின்னு அடிக்கப்போகும் மிக்ஜாம் புயல் – வேதர்மேன் பிரதீப் ஜான்!

Michaung Cyclone Updates: மிக்ஜாம் புயல் குறித்து தமிழ்நாடு வேதர்மேன் பிரதீப் ஜான், ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் பிரத்யேகமாக தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம். 

உருவானது ‘மிக்ஜாம்' புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது என்றும், சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி புயல் நகரும். … Read more