“ஒரு பதிவுக்கு ரூ.5,500 வசூல்… தமிழக பத்திரப் பதிவு துறையில் இமாலய ஊழல்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

மதுரை: ‘தமிழக பத்திரப் பதிவுத் துறையில் இமாலய ஊழல் நடைபெறுகிறது. ஒரு பத்திரப் பதிவுக்கு ரூ.5,500 வசூலிக்கப்படுகிறது’ என மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.9 முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். போக்குவரத்து துறையில் 35,000 பணியிடங்கள் காலியாக உள்ளது. பணியிலுள்ள ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அதிக வேலைப்பளுவை சந்தித்து வருகின்றனர். பேருந்துகளின் எண்ணிக்கை … Read more

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆண்டிபட்டி: வைகை அணையின் முழுக் கொள்ளளவான 71 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் மாத இறுதியில் 70.5 அடியை எட்டியது (மொத்த உயரம் 71 அடி). இதனையடுத்து அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. பொதுவாக, நீர் வெளியேற்ற காலங்களில் … Read more

சென்னையில் ரூ.540 கோடியில் நவீன திரைப்பட நகரம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு @ ‘கலைஞர் 100’ விழா

சென்னை: சென்னை பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கலைஞர் 100’ விழாவில் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “பல்வேறு அமைப்புகள் இந்த … Read more

“பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும்” – ஆளுநர் தமிழிசை அழைப்பு 

மதுரை: ‘பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களால் சதிக்க முடியாதது என எதுவும் இல்லை’ என ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அழைப்பு விடுத்துள்ளார். மதுரையில் கேசவ சேவா கேந்திரம் சார்பில் சக்தி சங்கமம் மாநாடு, ராஜா முத்தையா மன்றத்தில் இன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பகவத் கீதை சொற்பொழிவாளர் யமுனா வாசினி தேவி தாசி தலைமை வகித்தார். மாநாட்டு நிறைவு விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசியது: “நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு … Read more

தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு… வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் – முழு பின்னணி இதோ!

Tamil Nadu Latest News: தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிக்கும் நிறுவனம் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

விஜயகாந்துக்கு அஞ்சலி – மதுரையில் அனைத்துக் கட்சியினர் அமைதிப் பேரணி

மதுரை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி மதுரையில் இன்று நடந்த அமைதிப் பேரணியில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர். தேமுதிக நிறுவனத் தலைவரும், மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்த் டிச.28-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி இன்று மதுரை தேமுதிக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் அமைதிப் பேரணி நடைபெறறது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே யூ.சி.பள்ளியிலிருந்து மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி வரை அமைதிப் பேரணியாக சென்று அங்கு … Read more

தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் அமைகிறது மின்வாகன, மின்கலன் உற்பத்தி தொழிற்சாலை | உலக முதலீட்டாளர் மாநாடு 2024

சென்னை: உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘வின்ஃபாஸ்ட்’ (VinFast) தமிழகத்தில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் இவி கார் (EV Car) மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழகத்தில் தொழில் தொடங்குவதை … Read more

மெட்ரோ பணிகளால் போக்குவரத்து மாற்றம்-எந்தெந்த சாலைகளை தவிர்க்க வேண்டும்?

Traffice Changes From Tomorrow Due To Metro Work: மெட்ராே இரயில் பணிகள் காரணமாக நாளை சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அயோத்தி ராமர் கோயில் ஆன்மிகப் பயண உதவி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: “அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடமிருந்து ஏதாவது கோரிக்கை வரப்பெற்றால், முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவர்கள் செல்வதற்கு உண்டான உதவிகளை செய்வதற்கு இந்து சமய அறநிலைத் துறை தயாராக இருக்கின்றது” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயர் வைத்ததில் எந்த தவறும் இல்லை” என்று அவர் விளக்கம் அளித்தார். சென்னை, திருவல்லிக்கேணி, … Read more

Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா?

Vijay Participating In Kalaingar 100 Event : திரைத்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் என பலர் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.